இன்றளவில் யார் புது கார் வாங்கினாலும் 100க்கு 99 பேர் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் ஏர் பேக். முன்பெல்லாம் 1-2 ஏர் பேக் மட்டும் இருக்கும் கார்களுக்கு தற்போது 6-8 ஏர் பேக் வரையில் பொருத்தப்படுகிறது. இந்திய சாலை போக்குவரத்தில் ஏர் பேக் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 6 ஏர் பேக் கொண்ட கார்களின் சாரசரி மதிப்பு 15 - 20 லட்சம் வரும் வேளையில் வெறும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரில் மாருதி சுசூகி வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, தனது முக்கிய தயாரிப்பான வாகன் ஆர், ஆல்டோ K10, செலிரியோ, மற்றும் ஈகோ போன்ற மாடல்களில் ஆறு ஏர் பேக்குகளை நிலையான பாதுகாப்பு அம்சமாக வழங்குவதாக திங்கள்கிழமை அறிவித்தது. இந்த முடிவு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஏர் பேக்குகள், விபத்து ஏற்படும் போது பயணிகளை பாதுகாக்க உதவும் முக்கிய பாதுகாப்பு அம்சமாகும். ஆறு ஏர் பேக்குகள் முன் பக்கம் மற்றும் காரின் பி பில்லர்-ல் ஏர் பேக்குகளை கொண்டு பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த அதிமுக்கிய பாதுகாப்பு அம்சத்தை குறைந்த விலை மாடல்களிலும் மாருதி சுசூகி கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியான பார்த்தோ பானர்ஜி, "இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் நவீன சாலை உள்கட்டமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைகள், மற்றும் மாறி வரும் பயண முறைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் மக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார்களிலும் இதுவரை இல்லாத வகையில் 6 ஏர்பேக் பாதுகாப்பை வழங்கியுள்ளோம் " என்று கூறினார்.
வாகன் ஆர், ஆல்டோ K10, செலிரியோ, மற்றும் ஈகோ ஆகிய மாடல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை, குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களிடையே இந்த கார்கள் மிகவும் விருப்பமானவை.
இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வேகமாக மேம்பட்டு வருகிறது. அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மற்றும் நவீன சாலைகள் ஆகியவை பயண வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால், விபத்து ஏற்படும் அபாயமும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இன்றியமையாதவையாக உள்ளன. மாருதி சுசூகியின் இந்த முடிவு, இந்திய சாலைகளின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப பாதுகா ப்பு தரத்தை உயர்த்துவதற்கு உதவும்.
மாருதி சுசூகி, வாகன் ஆர், ஆல்டோ K10, செலிரியோ, மற்றும் ஈகோ ஆகிய மாடல்களை தனது அரினா விற்பனை வலையமைப்பு மூலம் விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications