புகுந்து விளையாடும் கொரோனா..! மாருதி சுசூகிக்கு 47% விற்பனை சரிவு!

கொரோனாவின் கோர முகம் இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக வெளி வரத் தொடங்கி இருக்கிறது.

இந்த மார்ச் 2020 மாதத்துக்கான காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது ஒவ்வொரு நிறுவனமும் எந்த அளவுக்கு அடி வாங்கி இருக்கும் என்பதை தெளிவாகப் பார்க்க முடியும்.

அதன் முதல் உதாரணம் போல, மாருதி சுசூகியின் மார்ச் 2020 விற்பனை நம்மை கலங்க வைத்திருக்கிறது.

மார்ச் 2020

மார்ச் 2020

கடந்த மார்ச் 2020-ல் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 83,792 வாகனங்களைத் தான் விற்க முடிந்ததாம். இது உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்த கணக்காம். ஆனால் முந்தைய மார்ச் 2019-ல் மொத்தம் 1,58,076 வாகனங்களை மாருதி சுசூகி விற்று இருக்கிறதாம். ஆக 47 % ஒட்டு மொத்த விற்பனை சரிந்து இருக்கிறது.

உள்நாட்டு விற்பனை

உள்நாட்டு விற்பனை

ஏற்றுமதியை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டால், உள் நாட்டு விற்பனை தான் பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறதாம். மார்ச் 2020-ல் 76,976 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த மார்ச் 2019-ல் 1,47,613 வாகனங்களை விற்றார்களாம். என்றால் உள்நாட்டு விற்பனை துண்டாக, மிகப் பெரிய அளவில் அடி வாங்கி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

காப்பாற்றிய மினி செக்மண்ட்

காப்பாற்றிய மினி செக்மண்ட்

மாருதி என்றாலே மினி செக்மெண்ட் கார்கள் தான் நிறைய நினைவுக்கு வரும். அதே போல விற்பனையிலும் மினி செக்மண்ட் கார்கள் தான் கை கொடுத்து இருக்கின்றன. ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ போன்ற மினி செக்மெண்ட் கார்கள் இந்த மார்ச் 2020-ல் 15,988 கார்கள் விற்று இருக்கிறார்கள். மார்ச் 2019-ல் 16,826 கார்களை விற்றார்களாம். சுமார் 5 % தான் விற்பனை சரிவு. இது ஓகே தான். ஆனால் காம்பாக்ட் செக்மண்ட் செம அடி கொடுத்து இருக்கிறது.

கைவிட்ட காம்பாக்ட் செக்மண்ட்

கைவிட்ட காம்பாக்ட் செக்மண்ட்

ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசயர் போன்ற ஹிட் கார்கள் தான் மாருதி சுசூகியின் காம்பாக்ட் செக்மண்ட் கார்கள். இந்த ரக கார்களின் விற்பனை இந்த மார்ச் 2020-ல் 40,519 தானாம். ஆனால் கடந்த மார்ச் 2019-ல் 82,532 வாகனங்களை விற்று இருக்கிறார்களாம். ஆக சுமார் 50 சதவிகிதம் விற்பனை சரிவு.

மற்ற ரக கார்கள்

மற்ற ரக கார்கள்

மிட் சைஸ் செடான் காரான சியாஸ் போன்ற கார்கள் மார்ச் 2019-ல் 3,672 கார்கள் விற்றார்களாம். இந்த மார்ச் 2020-ல் வெறும் 1,863 கார்களை மட்டுமே விற்று இருக்கிறார்களாம்.
அதே போல யுடிலிட்டை ரக கார்களான விட்டாரா பிரஸ்ஸா, எஸ் க்ராஸ், எர்டிகா போன்றவைகள் மார்ச் 2019-ல் 25,563 கார்கள் விற்பனை ஆனதாம், இந்த மார்ச் 2020-ல் 11,904 கார்கள் விற்பனை ஆகி இருக்கிறதாம். 53.4 % விற்பனை சரிவு.

ஏற்றுமதி

ஏற்றுமதி

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் 2019-ல் சுமாராக 10,460 கார்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்களாம். ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 4,712 வாகனங்களைத் தான் ஏற்றுமதி செய்து இருக்கிறார்களாம். ஆக சுமார் 55 % ஏற்றுமதி சரிவு.

காரணம்

காரணம்

கொரோனா வைரஸால், மக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை, செலவழிக்காமல், கார் கனவுகளை எல்லாம் தள்ளி வைத்து இருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில், தற்போது செய்யும் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்வியாகத் தான் இருக்கிறது. அதோடு
பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்,
இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு,
பி எஸ் 6 பிரச்சனை என பல பிரச்சனைகளால்... ஆட்டோமொபைல் விற்பனை அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+