லாபம் குறைந்த போதிலும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.45 டிவிடெண்ட்.. மாருதி சுசூகி அதிரடி!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி இந்தியா, இன்று அதன் மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதன் படி, இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 9.7% குறைந்து, 1,166.1 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதன் செயல்பாடுகள் குறைந்த நிலையில், மற்ற வருவாய் விகிதங்களும் மார்ச் காலாண்டில் குறைந்துள்ளதே இதற்கு காரணம் என மாருதி குறிப்பிட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு நெருக்கடியான நிலையிலும் வலுவான வருவாய் விகிதத்தினை பதிவு செய்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

மாருதி சுசூகியின் வருவாயானது மார்ச் காலாண்டில் 24,023.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 18,198.7 கோடி ரூபாயாக இருந்தது. இது 32% அதிகமாகும். இது இரு இலக்க விற்பனையை பதிவு செய்துள்ள நிலையில், இந்த வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. லாபம் சற்று குறைந்துள்ள நிலையில் சிஎன்பிசி நிபுணர்கள், இதனை 1668 கோடி ரூபாயாக கணித்திருந்த நிலையில், வருவாயினை 23,624 கோடி ரூபாயாகவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

களைகட்டிய விற்பனை

களைகட்டிய விற்பனை

நியூடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டில், 1291.7 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசூகி நிறுவனம் மார்ச் காலாண்டில் மொத்தம் 4,92,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 28% அதிகமாகும். விற்பனை அதிகரித்துள்ள போதிலும் லாபம் சரிவினைக் கண்டுள்ளது.

ஏற்றுமதி எவ்வளவு?

ஏற்றுமதி எவ்வளவு?

மாருதி சுசூகியின் மொத்த விற்பனையில் 4,56,707 வாகனங்கள் உள்நாட்டிலும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 26.7% அதிகரித்தும் காணப்படுகிறது. இதே 35,528 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 44.4% அதிகமாகும். இது கொரோனா லாகடவுனுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும்.

டிவிடெண்ட் அறிவிப்பு

டிவிடெண்ட் அறிவிப்பு

எபிட்டா மதிப்பு 28.8% வளர்ச்சி கண்டு 1991.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதிக விற்பனை மற்றும் விலை குறைப்பு என பல பல காரணிகளினால் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் மார்ச் 31வுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கு ஒரு பங்குக்கு டிவிடெண்டாக 45 ரூபாயினை அறிவித்துள்ளது.

இன்று பங்கு விலை

இன்று பங்கு விலை

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலையானது பிஎஸ்இயில் 1.24% குறைந்து (அ) 82.40 ரூபாய் குறைந்து, 6,558.20 ரூபாயாகவும், இதே என்எஸ்இயில் 1.06% (அ) 70.15 ரூபாய் குறைந்து, 6568.75 ரூபாயாகவும் காணப்படுகிறது. இன்று அதிகபட்சமாக 6709 ரூபாயினை உச்சமாகவும், 6542 ரூபாயினை குறைந்தபட்ச விலையாகவும் தொட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+