இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசூகி சிப் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனை, உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் சில முக்கியமான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் மூலம் மாருதி சுசூகியின் நீண்ட கால வர்த்தகம் மொத்தமாக மாறுவது மட்டும் அல்லாமல், வருமானமும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
முதலில் புதிய மாருதி காரை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் முடிவைப் பார்ப்போம்.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும் காரணத்தால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்துள்ளது. பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் மாருதி சுசூகி தொடர்ந்து சுமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
விலை உயர்வு
இதனால் தற்போது கூடுதலாக ஏற்படும் செலவுகள் அனைத்தையும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளது மாருதி சுசூகி. இதன் படி புதிய விலை உயர்வு வருகிற ஜனவரி 2022ல் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கார்களுக்கும் மாற்றப்பட்ட விலை உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
எஸ்யூவி கார்கள்
இதைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது மக்கள் அதிகளவில் சிறிய ரகக் கார்களுக்குப் பதிலாக எஸ்யூவி கார்களை அதிகம் விரும்பும் காரணத்தால், ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது அதிகப்படியான எஸ்யூவி கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
3 வருட திட்டம்
இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சிறிய மற்றும் மலிவான விலை கார்களைத் தாண்டி அதிகளவில் எஸ்யூவி கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த 3 வருடத்தில் 20 லட்சம் ரூபாயக்குக் கீழ் பல்வேறு எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மலிவுவிலை கார்கள்
அதிலும் முக்கியமாக மாருதி சுசூகி மலிவுவிலை கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை விடக் கூடாது என்பதற்காக 10 லட்சம் ரூபாய் விலையில் துவங்கும் 4 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
வர்த்தகம் மாற்றம்
மேலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் பிரிவில் இருக்கும் கார்களுக்கு அப்கிரேட் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் ஹூண்டாய், கியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களை வாங்குவதாக நம்புகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications