டெல்லி: மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்யலாம், எலான் மஸ்க் கேட்ட வரி சலுகையை விட அதிகமாக கொடுத்துள்ளது மத்திய அரசு.
இதனால் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கான தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. விரைவில் டெஸ்லா வாகனங்கள் இந்திய சாலைகளில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவின் வருகையால் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சரிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் டெஸ்லா வருகை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையை பாதிக்குமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளில் வாகன உற்பத்தி ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாகவும் அதனாலே தொழில் தொடங்க முடியவில்லை என்றும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கூறி வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்க வழிவகுத்துள்ளது.
மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மாருதி சுசுகியின் தலைவர் ஆர்.சி.பார்கவா, டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தாலும் உள்ளூர் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளார். உள்ளூர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரும் நோக்கில் புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கை அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் கார்களுக்கு என்பதால் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை. அதிக விலை கொண்ட வாகனங்களுக்கான சந்தையில் சற்று சரிவு உண்டாகும் என்றாலும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகிலேயே அதிகபட்ச இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்து வந்தார், வரியை குறைக்கும் பட்சத்தில் இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்றும் கூறி வந்தார். ஆனால் டெஸ்லாவுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது என மத்திய அரசு கூறி வந்தது. இந்தியாவில் ஆலை அமைக்கப்படும் என்ற உறுதி அளித்தால் மட்டுமே டெஸ்லாவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த சூழலில் மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை, இந்திய சட்டங்களை பின்பற்றும் நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் வாகனங்களை 15% வரியிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்று கூறியுள்ளது. குறிப்பாக 35,000 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 70% முதல் 100% வரை வரி விதிக்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications