வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கையிருப்பை குறைக்கும் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பொதுவாக காலண்டர் ஆண்டின் இறுதி மாதமாக டிசம்பரில் அதிரடி விலை குறைப்பு மற்றும் சலுகைகளை அறிவிக்கும். இது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை வாங்க செய்ய தூண்டும்.
அதேசமயம் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியை பயன்படுத்தி வாகனம் வாங்கினால் நாம் கொஞ்சம் பணத்தையும் சேமிக்கலாம். மாருதி சுசூகி நிறுவனம் தனது குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு ரூ.2.3 லட்சம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, 2023 டிசம்பர் முதல் தனது ஜிம்னி, ப்ராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.
மாருதி சுசூகி ப்ரான்க்ஸ்: மாருதியின் ப்ரான்க்ஸ் கார் இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் நெக்ஸா கார்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. ப்ரான்க்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ.40,000 வரையிலான மொத்த ஆதாயங்களை வழங்குகிறது.
மாருதி சுசூகி ப்ரான்க்ஸ்: மாருதியின் ப்ரான்க்ஸ் கார் இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் நெக்ஸா கார்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. ப்ரான்க்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ.40,000 வரையிலான மொத்த ஆதாயங்கள் வழங்குகிறது.
கிராண்ட் விட்டாரா: ஹைபிரிட் வகை உள்பட கிராண்ட் விட்டாரா மாடல் காருக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த மாடலில் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை தள்ளுபடி பலனை அனுபவிக்க முடியும்.
ஸ்டாக் கிடைப்பது பொறுத்து, நகரத்து நகரம் தள்ளுபடிகள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்க. சரியான தள்ளுபடி விலையை அறிய உங்கள் அருகிலுள்ள மாருதி சுசூகி டீலர்ஷிப்புக்கு செல்லவும். மாருதி சுசூகி தனது மாடல்களின் விலையை 2024 ஜனவரி முதல் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு எவ்வளவு என்பதை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனவே நீங்கள் இந்த மாதம் கார் வாங்குவது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications