மாருதி சுசூகியில் அது நடந்துருச்சு.. பட்டையை கிளப்பும் பங்கு விலை..!

டெல்லி: கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி வீழ்ச்சி, விற்பனை வீழ்ச்சி, லாபம் குறைவு, வருவாய் இழப்பு என அனைத்தும் நிறுவனத்திற்கு எதிர்மாறாகவே இருந்து வந்தது.

கடந்த ஆண்டு முதலே பெரும் விற்பனை வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், உற்பத்தியையும் குறைத்தன. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியிருப்பது கவனிக்கதக்கது.

இந்த உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் பங்கு விலையானது, 2.35 சதவிகிதம் அதிகரித்து, 7,199.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 165 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் உற்பத்தியானது 7.88 சதவிகிதம் அதிகரித்து 1,15,949 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் டிசம்பர் 2018ல் 1,07,,478 யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காம்பாக்ட் கார்கள் உற்பத்தி

காம்பாக்ட் கார்கள் உற்பத்தி

அதுவும் காம்பாக்ட் ரக கார்கள் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக புதிய வேகன் ஆர், இக்னிஸ், ஸ்விப்ட், பலினோ, ஓஇஎம் மாடல் மற்றும் டிசையர் உள்ளிட்ட ரக கார்கள் உற்பத்தியானது 62,448 யூனிட்களாக அதிகரித்துள்ளதாகவும், இதற்கு முந்தைய மாதத்தில் 44,329 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மினி கார்கள் உற்பத்தி வீழ்ச்சி

மினி கார்கள் உற்பத்தி வீழ்ச்சி

இதே சிறிய அளவிலான கார்களான ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ, பழைய வேகன் ஆர் 9.54 சதவிகிதம் உற்பத்தி சரிந்து 25,613 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் 28,314 யூனிட்கள் தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டு வாகனங்கள்

பயன்பாட்டு வாகனங்கள்

ஜிப்சி, விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ் எல் - 6, எஸ் - கிராஸ் உற்பத்தியானது டிசம்பர் 2019ல் 19,825 ஆகவும், இதே முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 16,436 யூனிட்களாகவும் இருந்துள்ளது. இது கிட்டதட்ட 21 சதவிகிதம் அதிகமாகும்.

சியாஸ் கம்மி தான்

சியாஸ் கம்மி தான்

இதே மாருதி சுசூகியின் நடுத்தர ரக கார்களான சியாஸ் உற்பத்தி கடந்த டிசம்பரில் வெறும் 894 ஆக மட்டும் இருந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 1,516 யூனிட்களாக இருந்தது. இதே எக்கோ வேன் மற்றும் ஆம்னி வேன் உற்பத்தி 62.16 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதத்தில் 6,182 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 16,338 யூனிட்களாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலகுரக வாகன உற்பத்தி

இலகுரக வாகன உற்பத்தி

இலகுரக வர்த்தக வாகன உற்பத்தியானது டிசம்பரில் 987 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 545 யூனிட்களாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நவம்பரில் 1,41,834 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,35,946 யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+