சமீப காலமாகவே இந்தியாவின் வாகனத்துறை பெரும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல மாதங்களாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் மாருதி சுசூகி குறிப்பிட்ட காம்பாக்ட் ரக கார் விற்பனை மட்டும் இமாலய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிலும் நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து பெருத்த அடி வாங்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் இப்படி ஒரு வளர்ச்சி, அதிலும் குறிப்பிட்ட ரக ஒரு காரருக்கான வளர்ச்சியில் இருப்பது அந்த காருக்கான வரவேற்பை குறிப்பிடுகிறது.
சொல்லப்போனால் இதனால் பல ஆயிரம் ஊழியர்கள், தங்களது வேலையினை இழந்துள்ளனர் என்றும், அந்தளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் பலன் கிடைத்தாற்போல் இமாலய சாதனையை படைத்துள்ளது மாருதி சுசூகி. இது வரும் காலங்களிலும் மாருதி சுசூகி இந்தியாவுக்கு உறுதுணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இமாலய சாதனை
இந்த நிலையில் மாருதி சுசூகி இந்தியா திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காம்பாக்ட் ரக காரான எஸ்யுவி விட்டாரா பிரெஸ்ஸா, அறிமுகப்படுத்திய நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது.
பல தொழில்நுட்பம்
இந்த காம்பாக்ட் ரக காரான எஸ்யுவி விட்டாரா பிரெஸ்ஸாவை 2016ல் ஆட்டோ எக்ஸ்போவில் தான் மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் பல முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாருதி சுசூகியின் குழு, இதனை வடிவமைத்து உருவாக்கியுள்ளதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் விருப்பம்
அதிலும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாருதி சுசூகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீ வாஸ்தவா கூறுகையில், இது போன்ற காம்பாக்ட் ரக கார்களுக்கு இந்திய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
சிறந்த உதாரணம்
மக்களின் விருப்பம் இது தான் என்பதற்கு சிறந்த உதாரணம் இது தான். வெறும் 47 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்வது சிறப்பானதொரு விஷயமாகும். ஆக இது பெரிய சாதனை தான் என்று கூறியுள்ளது. இந்த சிறந்த விற்பனையானது துவண்டு போன நிலையில் உள்ள இந்த நிறுவனத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications