மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் விலையை மூன்றாவது முறையாக இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆட்டோமொபைல் துறையினரின் செலவினம் அதிகரித்து வருகின்றது.
மேலும் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.
எப்போது முதல்
இதற்கிடையில் இந்தியாவில் ஏற்கனவே இருமுறை தனது கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசூகி நிறுவனம், மூன்றாவது முறையாக உயர்த்த திட்டமிட்டு வருகின்றது. இந்த விலை அதிகரிப்பானது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எவ்வளவு அதிகரிப்பு என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
பங்கு சந்தைக்கு தாக்கல்
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி இந்தியா, மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மாருதியின் அனைத்து மாடல் கார்களின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
முக்கிய காரணம் என்ன?
நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பானது, மாருதி சுசூகியின் உற்பத்தி விலையினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் விலையை அதிகரிக்க முக்கிய காரணமாக இது அமைந்துள்ளது. ஆக செப்டம்பர் 2021 முதல் மாருதியின் அனைத்து கார்களின் விலையும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கலாம் என தெரிகிறது.
விலை அதிகரிப்பு எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதத்தில் தான் மாருதியின் கார் விலையானது 34,000 ரூபாய் வரையில் அதிகரித்தது. இதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் கார் விலை 1.6% வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போதும் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த முறை எவ்வளவு விலை அதிகரிக்கும் என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
மற்ற நிறுவனங்களின் நிலை
மாருதி சுசூகியை தொடர்ந்து மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது வருவாயினை அதிகரிக்கும் எனலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications