இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் தரம் மீது எப்போது பல கேள்விகள் வைக்கப்பட்டாலும், இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகக் கார்களை விற்பனை செய்வது மாருதி சுசூகி தான்.
இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் ஒரு பொருளின் விலை அடிப்படையில் பெரும் வர்த்தகத்தைப் பெறவும் முடியும், இழக்கவும் முடியும். பொதுவாக விலை போரில் அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கை பெற்ற பிராண்ட் மட்டுமே வெற்றிப் பெற முடியும்.
அந்த வகையில் மாருதி சுசூகி இந்தியாவில் நீண்ட காலமாக இருப்பது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளரின் நம்பிக்கையில் இந்நிறுவனத்தை அடித்துக்கொள்ள வேறு யாருமே இல்லை. இவை அனைத்தும் டிசம்பர் காலாண்டு முடிவில் விற்பனை, லாபம், வருவாய் ஆகியவற்றில் வெளிப்பட்டு உள்ளது.
மாருதி சுசூகி
டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் மாருதி சுசூகி ஒருங்கிணைந்த மொத்த லாபமாகச் சுமார் 2,391.5 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டின் 1,041.8 கோடி ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் 129.55 சதவீதம் அதிகமாகும்.
வருவாய்
இதேபோல் மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 24.96 சதவீதம் அதிகரித்து 23,253.3 கோடி ரூபாயில் இருந்து 29,057.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபத்தில் 130 சதவீத லாபத்தைப் பதிவு செய்த மாருதி சுசூகி வருவாயில் வெறும் 25 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. லாப உயர்வுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா..?
காரணம்
மாருதி சுசூகி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்த காரணத்தால் அதன் கார்களின் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது, ஆனால் இந்த டிசம்பர் காலாண்டில் பல உற்பத்தி பொருட்களின் விலை குறைந்துள்ளது.
லாபத்தில் 130% உயர்வு
இந்த வித்தியாசம் தான் தற்போது லாபத்தில் 130 சதவீதம் வரையில் வர முக்கியக் காரணம், இதேவேளையில் டிசம்பர் காலாண்டில் பண்டிகை காலத்தில் அதிகளவிலான தள்ளுபடியை அறிவித்து இருந்த காரணத்தால் கார் விற்பனையும் அதிகரித்தது. இதனால் லாபம் பெரிய அளவில் மேம்பட்டது.
EBIT மார்ஜின்
டிசம்பர் காலாண்டில் EBIT மார்ஜின் அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 350 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.6 சதவீதமாகவும், Profit margin அளவு 380 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விற்பனை
இந்த டிசம்பர் 2022 காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவு 8.2 சதவீதம் அதிகரித்து மொத்தம் 4,65,911 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் 4,03,929 கார்களையும், ஏற்றுமதி வாயிலாக வெளிநாட்டுச் சந்தையில் 61,982 கார்களை விற்பனை செய்துள்ளது.
வளர்ச்சி
மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனையில் 365,673 கார்களையும், ஏற்றுமதி சந்தைகளில் 64,995 கார்களையும் விற்பனை செய்து மொத்தம் 430,668 கார்களை விற்பனை செய்திருந்தது.
நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
இது மட்டும் அல்லாமல் மாருதி சுசூகி நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டு முடிவில் 3,63,000 கார்களுக்கான ஆர்டர்களை வைத்துள்ளது. இதில் 1,19,000 கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கானது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications