இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான லாபத்தை இழந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவன முதலீட்டாளர்கள் சோகத்தில் இருந்தாலும், இந்நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 7,352.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரி மாருதி சுசூகி லாபத்தில் அப்படி எவ்வளவு சரிவை எதிர்கொண்டது..?!
மாருதி சுசூகி நிறுவனம்
மாருதி சுசூகி நிறுவனம் இன்று வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 65.35 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மாருதி சுசூகி 1,371.60 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில், தற்போது வெறும் 475.30 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
மொத்த விற்பனை
இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவீடும் 9.09 சதவீதம் குறைந்து 19,297.80 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 17,689.30 கோடி ரூபாயாக இருந்தது. இக்காலாண்டில் சிப் தட்டுப்பாடு மற்றும் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம் போன்ற முக்கியமான காரணத்தால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி பொருட்கள் விலை
மேலும் இந்தியாவில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கார்களின் விலை உயர்வு எனப் பல காரணிகள் செப்டம்பர் காலாண்டில் விற்பனை அளவீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு கார் சிப் தயாரிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கார் விற்பனை
இக்காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 3,79,541 கார்களை விற்பனை செய்துள்ளது, இதில் 3,20,133 கார்களை இந்தியாவிலும், 59,408 கார்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்துள்ளது. மேலும் சிப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாகக் கார்களை ஆர்டர் செய்துள்ள 2,00,000 வாடிக்கையாளர்களுக்குக் கார்களை டெலிவரி செய்ய முடியவில்லை.
ஸ்டீல், அலுமினியம் விலை
இக்காலாண்டில் கார் தயாரிப்புக்கு மிக முக்கியத் தேவையான ஸ்டீல், அலுமினியம், இதர சில உலோகங்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுத்த வேளையிலும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications