நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, வாகனங்களின் அதிக விலை காரணமாக விற்பனை பாதித்துள்ளதாகவும், ரூ.10 லட்சத்துக்கும் கீழான வாகனங்களின் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகியின் தலைவரான RC. பார்கவா கூறுகையில், சிறிய அளவிலான கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், மற்ற வகை கார்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மாருதி சுசூகி அதிக விற்பனையை பதிவு செய்தது. ஆனால் தற்போது கார்களின் விலை உயர்வால் மக்கள் அதை வாங்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் பார்கவா கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து 3,102 கோடியாக இருந்தது. இது 1 வருடத்திற்கு முன்பு 3,786 கோடியாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்ட கால மூலதன வரியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று கூறப்படுகிறது.
மார்க்கெட்டிங் மற்றும் தள்ளுபடிகளுக்கான செலவும் மாருதி சுசூகி நிறுவனத்தின் லாபத்தை பாதித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.37,449 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் வருவாய் ரூ.37,339 கோடியாக இருந்தது.
சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையின் மூத்த நிர்வாக அதிகாரியான பர்தோ பானர்ஜி, முன்னதாக மந்தமாக இருந்த கார்களின் தேவை, இந்தப் பண்டிகை காலத்தில் திரும்பி வருவதாகக் கூறினார். "நாங்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் கார் டெலிவரிகளுடன் அக்டோபர் மாதம் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட 1.9 லட்சம் கார்களை விற்பனை செய்தோம்", என்றும் கூறியுள்ளார்
முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்ட விற்பனை மந்த நிலை இந்த ஆண்டு 3 சதவீதம் முதல் 4 சதவீத வளர்ச்சியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பார்கவா கூறியுள்ளார்.
மாருதி சுசூகி விற்பனை மந்த நிலை அதிகரித்த வாகன விலைகள் மற்றும் குறைந்த வாங்கும் திறன் காரணமாக ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகரித்துவிட்டன. மக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கருத்தில் கொண்டு EV வாகனங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். இதனால் கார் தொழிலுக்கு சவாலான காலமாகத்தான் தற்போதைய காலம் அமைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications