இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தனது சந்தை பங்கீட்டை மீண்டும் உயர்த்த வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துக்கொண்டது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சிறிய கார்களின் விற்பனையை அதிகரிப்பது தான் எளிதான வழி.
ஆனால் இந்தியா முழுவதும் தற்போது எஸ்யூவி டிரெண்ட் இருக்கும் நிலையில் இது மிகவும் சவாலானது. இத்தகைய சூழ்நிலையில் தான் மாருதி சுசூகி அதிகப்படியான டிஸ்கவுன்ட், விழாக்கால தள்ளுபடி அறிவித்து பைக் வாங்குவோரை கார் வாங்க வைத்து அழகு பார்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டில் மாருதி சுசூகி தனது என்டரி மாடல்களான Alto மற்றும் S-Presso-வின் விற்பனையை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தும் திட்டத்தை அறிவித்தது. இந்த சிறிய கார் மாடல்களின் விற்பனை இலக்கை 2.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரையில் உயர்த்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2020 நிதியாண்டில் பதிவான 2.47 லட்சம் யூனிட்கள் என்ற சாதனை அளவை தாண்ட வேண்டும் என்று திட்டமிட்டு இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசூகி வர்த்தகத்தின் பலமே இந்த entry-level கார்கள் தான், ஆனால் தற்போது சந்தையில் எஸ்யூவி டிரெண்ட் இருக்கும் காரணத்தால் இப்பிரிவில் விற்பனை சரிவை தடுக்கும் நோக்கத்தில் தீவிர தள்ளுபடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக SUV டிரெண்ட் இருக்கும் காரணத்தால் இந்திய கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகியின் சந்தை பங்கு பாதிக்கப்பட்டது.
2024-25 நிதியாண்டில், பயணிகள் வாகன சந்தையின் மொத்த விற்பனை 2 சதவீதம் உயர்ந்தபோதிலும், மாருதி சுசூகியின் சந்தை பங்கு 40.9 சதவீதமாக குறைந்தது, இது 2013 நிதியாண்டுக்குப் பிறகு மிகக் குறைவான அளவாகும். 2019 மற்றும் 2020 நிதியாண்டுகளில் 51 சதவீதம் என்ற உச்சத்தை அடைந்த இந்நிறுவனம் எஸ்யூவி டிரெண்ட் காரணமாக நிலைமை மாறியுள்ளது.
இந்த புதிய உக்தி மூலம் பைக் வாங்குவோரை கார் வாங்க வைக்க வேண்டும் என்ற இலக்கில் சிறிய மற்றும் என்டரி லெவல் கார்களின் விற்பனை அதிகமாகியுள்ளது.
இந்த உத்தி, பண்டிகை காலத்தில் நிதி உதவிகளை அதிகரித்து, இரு சக்கர வாகன ஓட்டிகளை கார உரிமையாளர்களாக மாற்றும் பிரச்சாரங்களை உள்ளடக்கியது. சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு, இது போன்ற மாடல்கள் பட்ஜெட் உள்ளிட்ட போக்குவரத்து தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications