இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மாருதி சுசூகி தனது உற்பத்தி தலைமையிடத்தைக் குருகிராம்-ல் இருந்து மொத்தமாக ஹரியானாவின் சோனிபாட் நகரத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி
இந்திய ஆட்டோமொபைல் துறையில் சிங்கமாக விளங்கும் மாருதி சுசூகி விற்பனையும், உற்பத்தியிலும் தொடர்ந்து முன்னோடியாக விளங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மாருதி சுசூகி தனது புதிய சோனிபாட் தொழிற்சாலையைச் சுமார் 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்ட திட்டமிட்டு உள்ளது.
மாருதி 800 கார்
மாருதி சுசூகி 1983ல் இருந்து குருகிராம் தொழிற்சாலையை உற்பத்தி தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது, மாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி 800 கார் இந்தத் தொழிற்சாலையில் இருந்து தான் தயாரிக்கப்பட்டது. மேலும் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு மனேசர் பகுதியிலும் ஒரு தொழிற்சாலை உள்ளது.
18,000 கோடி ரூபாய்
இப்புதிய தொழிற்சாலை குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவரான ஆர்.சி.பார்கவா கூறுகையில், 18,000 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பிரம்மாண்ட தொழிற்சாலை மாருதியின் 4வது உற்பத்தி தளமாக இருப்பது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய தொழிற்சாலையாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சோனிபாட் தொழிற்சாலை
சோனிபாட் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் 2025ஆம் ஆண்டில் உற்பத்தி பணிகள் துவங்கும் என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவரான ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
லாபம், வருவாய்
இன்று மாருதி சசூகி டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இக்காலாண்டில் மாருதி சுசூகி வெறும் 1,011 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,941 கோடி ரூபாயாக இருந்தது. இக்காலாண்டில் மாருதி சுசூகி 22,187 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
கார் விற்பனை
டிசம்பர் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் சுமார் 4,30,668 கார்களை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4,95,897 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் மாருதி சுசூகி நிறுவனத்திற்குச் சுமார் 2,40,000 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications