டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை 1.9 சதவிகிதம் குறைந்து 1,50,630 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,53,539 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

இதே உள்நாட்டு விற்பனை 1.6 சதவிகிதம் குறைந்து, 1,43,686 வாகனங்களாகவும், இதே நவம்பர் 2018ல் 1,46,018 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிய ரக கார்களான ஆல்டோ மற்றும் வேகன் ஆர் 26,306 வாகனங்களாகவும், இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 29,954 வாகனங்களாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டதட்ட 12.2 சதவிகிதம் குறைவாகும். இதே காம்பாக்ட் ரக கார்களான ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலினோ, அண்ட் டிசையர் உள்ளிட்ட கார்கள் விற்பனை 7.6 சதவிகிதம் அதிகரித்து 78,013 வாகனங்களான விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நவம்பர் 2018ல் 72,533 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர ரக கார்களான செடான் அன்ட் சியாஸ் வெறும் 1,448 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 3,838 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை விஸ்டாரா பிரெஸ்ஸா எஸ் கிராஸ் அன்ட் எர்டிகா கார்கள் விற்பனை 1.3 சதவிகிதம் சரிந்து, 23,204 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு 23,512 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே மொத்த வாகனங்கள் ஏற்றுமதி நவம்பர் மாதம் 7.7 சதவிகிதம் சரிந்து, 6,944 வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு 7,521 ஆக இருந்தது குறி[ப்பிடத்தக்கது.
தொடர்ந்து கடந்த பல மாதங்களாகவே சரிவைக் கண்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் மாருதி சுசூகி வீழ்ச்சியையே கண்டு வருகிறது. கடந்த மாதமே இதன் மூத்த நிறுவனம் இந்த நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் நவம்பர் மாதத்திலும், விற்பனை வீழ்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications