டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை பிப்ரவரியில் 1.1% குறைந்து 1,47,100-ஆக குறைந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,48,682 ஆக இருந்த மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை தற்போது சற்று குறைந்துள்ளது.

உள்நாட்டு விற்பனை 1.6% சரிந்து 1,36,849 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,39,100 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஏப்ரலில் வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகளினால் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020ல் மொத்தம் 1,47,110 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது உள் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 1,34,150 யூனிட்களோடு சேர்த்தும் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் ஏற்றுமதி 10,261 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் சிறிய ரக கார்களான ஆல்டோ மற்றும் வேகன் ஆர் 27,499 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதே ஜனவரி மாதத்தில் 25,885 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே காம்பாக்ட் ரக கார் விற்பனையில் ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலினோ மற்றும் டிசையர் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை 3.9% குறைந்து 69,828 ஆக இருந்தது. இதே கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் 72,678 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இதே நடுத்தர ரக கார்களான செடான் சியாஷ் கார்கள் 2,544 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும், இது முன்னர் 3,084 யூனிட்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே பயன்பாட்டு வாகனங்களான விட்டாரா, பிரெஸ்ஸா எஸ் -கிராஸ், எர்டிகா விற்பனை 3.5% அதிகரித்து, 22,604 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 21,834 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதே மொத்த ஏற்றுமதி 7.1% அதிகரித்து 10,261 ஆக அதிகரித்துள்ளது. இது முன்னர் 9,582 யூனிட்களாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும் மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் மாருதி சுசூகி இந்தியாவின் பங்கு விலை 6,284 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் எதிரொலி நாளை சந்தை தொடக்கத்தில் தெரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications