மாஸ் காட்டும் மாருதி சுசூகி! தூள் கிளப்பிய விற்பனை!

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில வருடங்களாகவே, மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு இருந்தது.

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல மாதங்களுக்கு விற்பனை அடி வாங்கியது. விற்பனை வீழ்ச்சியில் இருந்து, இந்திய ஆட்டோமொபைல் துறை மீள்வதற்குள், மற்ற சிக்கல்கள் தலை எடுக்கத் தொடங்கின.

பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் விலை ஏற்றம், டாக்ஸி வசதிகள் அதிகரிப்பு, ஜிஎஸ்டி, பாரத் ஸ்டேஜ் 6 விதிமுறைகள், எலெக்ட்ரானிக் வாகனங்கள்... என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது ஆட்டோமொபைல் துறை.

வாங்க பார்க்கலாம்

வாங்க பார்க்கலாம்

ஒருவழியாக மேலே சொன்ன சவால்களை எல்லாம் கடந்து, இந்திய ஆட்டோமொபைல் துறையின் வியாபாரம், இப்போது, இந்த செப்டம்பர் 2020-ல் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதைத் தான் மாருதி சுசூகி கம்பெனியின் விற்பனை தரவுகள் நமக்குச் சொல்கிறது. எவ்வளவு விற்பனை அதிகரித்து இருக்கிறது?

விற்பனை 32 % உயர்வு

விற்பனை 32 % உயர்வு

இந்திய கார் சந்தையில் சுமாராக 50 சதவிகித சந்தையை தன் வசம் வைத்திருக்கும் மாருதி சுசூகியின் உள் நாட்டு விற்பனை, கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் 32 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. எனவே சத்தம் காட்டாமல் தன் உற்பத்தியையும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது மாருதி சுசூகி.

1,52,608 வாகனங்கள்

1,52,608 வாகனங்கள்

கடந்த செப்டம்பர் 2020-ல் மாருதி சுசூகி கம்பெனி மொத்தம் 1,52,608 வாகனங்களை விற்று இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 மாதத்தில், மாருதி சுசூகி 1,15,452 வாகனங்களை விற்றது. ஆக, மாருதி சுசூகியின் விற்பனை 32.1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. நல்ல வளர்ச்சி தான்.

டிமாண்ட் அதிகரிக்கும்

டிமாண்ட் அதிகரிக்கும்

தற்போது இந்தியாவில் நவராத்திரி, தசரா, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வரும். இந்த பண்டிகை காலத்தில், வாகனங்களின் விற்பனை மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனச் சொல்கிறது மாருதி சுசூகி தரப்பு. போகிற போக்கைப் பார்த்தால், ஆட்டோமொபைல் சந்தை, இந்த 2020-ம் ஆண்டுக்குள்ளேயே, பழைய நிலைக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது.

9% ஏற்றுமதி அதிகரிப்பு

9% ஏற்றுமதி அதிகரிப்பு

மாருதி சுசூகி கம்பெனியின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் 2019-ல் 7,188 வாகனங்களாக இருந்ததாம். இந்த செப்டம்பர் 2020-ல் மாருதி சுசூகி கம்பெனியின் ஏற்றுமதி 7,834 வாகனங்களாக அதிகரித்து இருக்கிறதாம். இது 9% உயர்வு. மாருதி சுசூகியின் மொத்த விற்பனையில், மினி + காம்பேட் செக்மெண்ட் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி இருக்கிறதாம்.

வணிக வாகனம்

வணிக வாகனம்

மாருதி சுசூகி வெறுமனே பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, ‘சூப்பர் கேரி' என்கிற பெயரில் ஒரு வணிக வாகனத்தையும் விற்பனை செய்து வருகிறது. இந்த சூப்பர் கேரி வாகனம், கடந்த செப் 2019-ல் 1,10,454 விற்பனை செய்தார்கள். இந்த செப் 2020-ல் 1,47,912 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக 33.9 % வணிக வாகன விற்பனை அதிகரித்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+