சென்னை: ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனமும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தங்கள் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஜனவரி 1ஆம் தேதி முதல் தங்கள் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் அனைத்து ரக கார்களின் விலையும் உயர்த்தப் போவதாக தெரிவித்திருந்தது.

அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை காரின் விலை உயரும் என ஹூண்டாய் மோட்டார் அறிவித்தது. இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனமும் தங்கள் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இது தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தங்கள் நிறுவன கார்களின் விலையை உயர்த்தப் போவதாக கூறியுள்ளது. மாடல்களை பொறுத்து கார்களின் விலை உயர்வு மாறுபடும் எனக் கூறியுள்ளது.
குறிப்பாக இந்த விலை உயர்வானது 4 சதவீதம் வரை இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. கார் உற்பத்தி செலவினம் அதிகரித்தது மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் கார் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 4 கார் நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் மாருதி சுசுகி அதில் இணைந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன கார்களின் விலையை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப் போவதாக அறிவித்திருந்தன. பின்னர் ஹூண்டாய் நிறுவனம் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்திய கார் சந்தையில் 40 சதவீத பங்கினை கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 1.4 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1.34 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் Brezza, Fronx, Grand Vitara, Ertiga, XL6 ம் Invicto ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக எஸ்யூவி கார்கள் தான் அதிகம் விற்பனையாகிறதாம்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications