இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி இன்று தனது புதிய MPV காரான இன்விக்டோ-வை அறிமுகப்படுத்தி கார் ரசிகர்களையும், புதிதாக கார் வாங்கப்போகிறவர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
மாருதி சுசூகி இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி Zeta+ (7 சீட்டர்), Zeta+ (8 சீட்டர்) மற்றும் Aplha+ (7 சீட்டர்) ஆகிய 3 வேரியென்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காரின் விலை 24.79 லட்சம் ரூபாய், 24.84 லட்சம் ரூபாய், 28.42 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மாருதி சுசூகி-யின் NEXA பிரிவில் அறிமுகமாகும் 8 வது காராக மாருதி இன்விக்டோ விளங்குகிறது. 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் ஹைப்ரிட் மோட்டார் உடன் வருவதால் 23 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாருதி இன்விக்டோ காரின் மிட் வேரியன்ட் Zeta+ (8 சீட்டர்) மாடல் வாங்கினால் மாத ஈஎம்ஐ மட்டும் 61,860 ரூபாயாகும். மாருதி சுசூகி Invicto கார்-ஐ தற்போது நெக்ஸா ஷோரூம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெறும் 25000 ரூபாய் தொகை முன்பதிவில் புக் செய்ய முடியும். மேலும் இந்த கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசூகி முதல் முறையாக 20லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விலைக்கு புதிய கார்-ஐ அறிமுகம் செய்து ஆடம்பர பிரிவுக்குள் நுழைந்துள்ளது. கிசாஷி காரின் தோல்விக்கு பின்பு இதுவரையில் ஒரு கார் கூட 20 லட்சம் ரூபாய்க்கு மேல் அறிமுகம் செய்தது இல்லை, தற்போது டோயோட்டா கொடுத்த நம்பியும், உதவியுடனும் சேர்ந்து ஹைப்ரிட் தொழில்நுட்பம் சக்தியுடன் 28.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இதன் எதிரொலியாக மாருதி சுசூகி பங்குகள் மும்பை பங்குச்சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாக 4% உயர்ந்து 10,000 ரூபாய் என்ன புதிய மைல்கல்லை கடந்தது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகப்படியாக 10036.70 ரூபாய் வரையில் உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் மாருதி சுசூகி பங்குகள் 18.88 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று வர்த்தக முடிவில் 3.55 சதவீதம் உயர்ந்து 9990.10 ரூபாய் அளவில் உள்ளது, இதன் மூலம் மாருதி சுசூகியின் மொத்த சந்தை மதிப்பு 3.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications