சென்னை: மாருதி சுசூகி இந்தியா, மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 450 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தங்களது செயல்பாடுகளை பசுமை ஆக்குவதற்கான முயற்சியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் (Renewable Energy) பயன்படுத்தி மாருதி சுசூகி இந்தியா, அடுத்த மூன்று ஆண்டுகளில் சோலார் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 2023 முதல் 2024ஆம் நிதியாண்டில், ஏற்கனவே ரூ.120.8 கோடி முதலீடு செய்துள்ளது. இனி வரும் நிதியாண்டுகளில் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டை 5 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ. 450 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2030ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டிற்குள் கார் உற்பத்தியினை, சுமார் 2 மில்லியனிலிருந்து 4 மில்லியனாக அதிகரிப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், "எங்கள் செயல்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் விரைவுபடுத்தி வருகிறோம்" என்று மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி Hisashi Takeuchi தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது இயற்கை வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆற்றல் ஆகும். இதில் சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவை அடங்கும். இவை பாரம்பரிய எரிசக்தி வளங்களான நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை விட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. கார் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பல்வேறு வழிகளில் உதவுகிறது.
செலவு குறைப்பு: சூரிய மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை விட மலிவானவை. இது கார் உற்பத்தியின் மொத்த செலவைக் குறைக்க உதவும்.
கார்பன் குறைப்பு: புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கார் உற்பத்தி செயல்பாட்டின் போது வெளியாகும் CO2 அளவைக் குறைக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து, பூமி வெப்பமயமாதல் தணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது
மாருதி சுசூகி நிறுவனம் தனது சூரிய ஆற்றலை 2024ஆம் நிதியாண்டில் 43.2 மெகாவாட்டாக விரிவுபடுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது, கார் உற்பத்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு உற்பத்தி செய்ய உதவும்.


Click it and Unblock the Notifications