இந்தியா என்கிற மிகப் பெரிய ஆட்டோமொபைல் சந்தையில், சுமாராக 50 சதவிகித சந்தையை தன் கைக்குள் வைத்திருக்கிறது மாருதி சுசூகி.
அப்பேற்பட்ட, இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, இன்று (06 அக்டோபர் 2020, செவ்வாய்க்கிழமை) தனது காம்பேக்ட் எஸ்யூவி ரக வாகனமான விட்டாரா பிரெஸ்ஸா(Vitara Brezza) அறிமுகப்படுத்தப்பட்டு 4.5 ஆண்டுகள் ஆகின்றன.
அதற்குள் 5.5 லட்சம் வாகனங்களை விற்று இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
பாரத் ஸ்டேஜ் 6 பெட்ரோல் இன்ஜின்
இந்தியாவுக்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி வாகன இது. இந்த ரக கார்கள், கடந்த 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பாரத் ஸ்டேஜ் 6 எமிஷன் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் கே - சீரிஸ் பிஎஸ் 6 பெட்ரோல் எஞ்சின் ரகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
32,000 வாகனங்கள்
இந்த புதிய ரக விட்டாரா ப்ரெஸ்ஸா ஏற்கனவே ஆறு மாதங்களுக்குள் 32,000 வாகனங்களை விற்றுள்ளது என மாருதி சுசூகி நிறுவனம் ஒரு அறிக்கையில் சொல்கிறது. வாகனத்தின் ஒட்டுமொத்த சந்தை செயல்திறன் குறித்து மாருதி சுசுகி இந்தியா நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, விட்டாரா ப்ரெஸா காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகச் சொல்லி இருக்கிறார்.
வாடிக்கையாளர் விருப்பத்துடன் ஒத்துப் போதல்
எஸ்யூவி வாங்குபவரின் விருப்பத்துடன் ஒத்துப் போகிறது. விட்டாரா பிரெஸ்ஸாவின் அழுத்தமான வடிவமைப்பு, விட்டாரா பிரெஸ்ஸாவின் மொழி, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்டி குணாதிசயங்கள் வாடிக்கையாளர்களின் விருபத்தோடு ஒத்துப் போகிறது என்கிறார் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, மாருதி சுசுகி இந்தியா, நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை).
தன் இடத்தை உறுதி செய்கிறது.
"விட்டாரா பிரெஸ்ஸாவின் பல வடிவமைப்பு புதுப்பிப்புகளுடன், சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், விட்டாரா ப்ரெஸா வாடிக்கையாளர்களை மேலும் சுண்டி இழுக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது" என்கிறார் மாருதி சுசூகியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவஸ்தவா. மாருதி சுசூகி பங்குகள் விலை 1.1 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications