இந்திய ஆட்டோமொபைல் துறை சரியான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது, மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான ஆர்வம் இருந்தாலும் இந்தியாவில் போதுமான பப்ளிக் சார்ஜிங் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் எலக்ட்ரிக் கார்களை வாங்க பெரும்பான்மையான மக்கள் தயங்கினர்.
ஆனால் ஹைப்ரிட் மாடல் கார்கள் வந்த உடன் மக்கள் எலக்ட்ரிக் கார்களை ஓரம் கட்டிவிட்டு மக்கள் இதை வாங்க துவங்கியது, கடந்த 6 மாத விற்பனை அளவுகளைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் பாதையை வகுத்த மாருதி சுசூகி புதிய எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார் குஜராத்தில் தயாரிக்கப்படும் என்றும், இதற்காக ஹன்சல்பூரில் உள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு புதிய ஆலை சேர்க்கப்பட உள்ளதாகவும் புதன்கிழமை அறிவித்தது.
மாருதி சுசூகி நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூரில் Suzuki Motor Gujarat Private Ltd (SMG) என்ற கார் உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. இது மாருதி சுசூகியின் முழு துணை நிறுவனமாகும், 2017 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில் தான் புதிய எலக்ட்ரிக் கார் பளபளவெனத் தயாராக உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பார்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ஒரு SUV மாடலாக இருக்கும். மேலும் இந்தக் கார் 2024-25 ஆம் நிதியாண்டில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இப்புதிய எலக்ட்ரிக் கார் முழுக்க முழுக்கக் குஜராத் ஆலையில் தயாரிக்கப்பட்ட உள்ளது, ஹன்சல்பூரில் உள்ள தொழிற்சாலையில் தற்போது A, B மற்றும் C என 3 தொழிற்சாலைகள் உள்ளது. இந்தநிலையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காகப் புதிய உற்பத்தி தளம் சேர்க்கப்படும் என்றும் ராகுல் பார்தி தெரிவித்தார்.
குஜராத் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார் இந்தியா முழுவதும் விற்கப்படுவதைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது. ஹன்சல்பூர் ஆலையில் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காக 3,100 கோடி ரூபாய் முதலீடு செய்யக் குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மார்ச் 2022-ல் கையெழுத்திட்டது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்-ன் கான்செபட் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு உள்ள வேளையில், இந்தக் கார் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 550 கிலோமீட்டர் பயணம் செய்யக் கூடியவையாக இருக்கும். மேலும் இந்தக் கார் 60 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும்.
இப்புதிய எலக்ட்ரிக் கார் எவ்வளவு தயாரிக்கப்பட உள்ளது, இதன் விலை என்ன ஆகிய முக்கிய விபரம் வெளியிடப்படவில்லை. இதேபோல் மாருதி சுசூகி - டோயோட்டா மத்தியிலான ஒப்பந்தம் மூலம் ஹைப்ரிட் வாகனங்களில் பெரும் வர்த்தகத்தை ஈர்த்த மாருதி சுசூகி தற்போது 100 சதவீத எலக்ட்ரிக் கார்-ஐ தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications