71% வீழ்ச்சி.. மே மாதத்தில் கார் விற்பனை மோசமான சரிவு.. ஏன்.. என்ன காரணம்..!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த மே மாதத்தில் வாகன விற்பனையில் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், கடந்த மே மாதத்தில் விற்பனை 71% சரிந்து, வெறும் 46,555 வாகனங்களையே விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,59,691 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த சரிவானது கொரோனா இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்களில், லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களிலும் அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இன்னும் சில இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், லாக்டவுன் மத்தியில் மக்கள் அத்தியாவசியம் தவிர மற்றவற்றில் முதலீடு செய்ய யோசித்து வருகின்றனர்.

இதுவும் சரிவுக்கு ஒரு காரணம்

இதுவும் சரிவுக்கு ஒரு காரணம்

ஏனெனில் லாக்டவுன் கட்டுபாடுகள் அதிகாரித்தால், நிதி நெருக்கடி ஏற்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இன்னும் சிலர் கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வேலையினை இழந்து, தங்கள் வாழ்வதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் மக்கள் கார் போன்ற சொகுசு செலவினங்களை ஒதுக்கி வைத்துள்ளனர் என்றே கூறலாம்.

டெலிவரி செய்ய முடியவில்லை

டெலிவரி செய்ய முடியவில்லை

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மே 1 முதல் மே 16 வரையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தனது ஆலையில் உற்பத்தியினை நிறுத்தியிருந்தது. இதனால் விற்பனை நிறுவனங்களுக்கு டெலிவரி செய்ய முடியவில்லை என்றே கூறலாம். இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,42,454 வாகனங்களை டெலிவரி செய்திருந்த நிலையில், இது ஏப்ரல் மாதத்தில் 35,293 வாகனங்களை மட்டுமே டெலிவரி செய்துள்ளது. இதுவும் 75% சரிவினைக் கண்டுள்ளது. இதனாலும் வாகனங்களை புக் செய்தவர்களுக்கு டெலிவரி செய்ய இயலவில்லை என்றும் அறிவித்துள்ளது.

மினி கார்கள் விற்பனை

மினி கார்கள் விற்பனை

இதில் குறிப்பாக மினி ரக கார்களாக ஆல்டோ, எஸ் பிரஸ்ஸொ 81% சரிவினைக் கண்டு 4,760 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதே கடந்த ஏப்ரல் மாதத்தில் 25,041 வாகனங்களை விற்பனை செய்திருந்தது கவனிக்கதக்கது. இதே காம்பாக்ட் ரக கார்களான ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஷ், பலினோ, டிசையர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 72% சரிந்து 20,343 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 72,318 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

நடுத்தர ரக வாகனங்கள்

நடுத்தர ரக வாகனங்கள்

இதே நடுத்தர ரக வாகனங்களாக செடான், சியாஸ் வெறும் 349 வாகனங்களாகவும், இதே ஏப்ரல் மாதத்தில் 1,567 வாகனங்களாகவும் விற்பனை செய்திருந்தது. இதே பயன்பாட்டு வாகங்களான விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ், எர்டிகா விற்பனை 75% குறைந்து 6,355 வாகனங்களாகவும், இது ஏப்ரல் மாதத்திக்ல் 25,484 வாகனங்களாகவும் இருந்துள்ளது.

ஏற்றுமதியும் சரிவு

ஏற்றுமதியும் சரிவு

இதே ஏற்றுமதி விகிதமானது 35% குறைந்து, 11,262 வாகனங்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 17,237 வாகனங்களாகவும் ஏற்றுமதியினை கண்டிருந்தது. லாக்டவுன், ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்ட சில காரணிகளால் இந்த சரிவினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+