நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் இருமடங்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மாருதியின் சுசூகியின் மொத்த விற்பனை 176,306 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 86,380 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது சர்வதேச அளவில் நிலவி வரும் மின்சாதன பாகங்கள் பற்றாக்குறைக்கு மத்தியிலும், டெலிவரி அதிகரித்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் விற்பனை
கடந்த மாதம் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனையானது, உள்நாட்டில் இருமடங்கு அதிகரித்து 1,54,903 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 68,815 யூனிட்களாக இருந்தது.
மினி கார் விற்பனை, ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ்ஸோ வாகன விற்பனையானது, 29,574 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 14,936 வாகனங்களாகவும் இருந்தது.
காம்பாக்ட் ரக கார் விற்பனை
இதே காம்பாக்ட் ரக கார்களான ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஷ், பலினோ, டிசையர் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனையும், 72,176 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 2021ல் 20,891 யூனிட்களாக இருந்தது.
இதே நடுத்தர ரக வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக செடான் சியாஷ் வாகன விற்பனையானது 1359 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டி 981 ஆக இருந்தது.
மாருதியின் ஏற்றுமதி
பயன்பாட்டு வாகனங்களில் விஸ்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ், எர்டிகா உள்ளிட்ட வாகனங்களின் விற்பனையானது 32,574 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 18,459 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏற்றுமதி விகிதமானது 21,405 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 17,565 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 9% அதிகரித்து, 3,79,011 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனம் 3,47,156 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் மொத்த இருசக்கர வாகன விற்பனையானது 9% அதிகரித்து, 3,61,729 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 332,511 ஆக அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனையானது 16% அதிகரித்து, 2,83,878 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 2,44,084 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications