12 வயதில் ஒரு குழந்தை என்ன செய்யும், மற்ற பிள்ளைகளுடன் ஜாலியாக விளையாடும், பள்ளிக்கு சென்று படிக்கும், ஆனால் இங்கு ஒரு குழந்தை 12 வயதில் இருந்து கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை பாதுகாத்து, தனது கனவுகளை மறந்து ஓடிக்கொண்டு இருந்தது.
இளமை முழுவதையும் வறுமையிலும் சோகத்திலும் கழித்த இவர் இன்று 8200 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்வில் இன்ஸ்பிரேஷன் ஆக ஒருவர் இருப்பார், ஆனால் 3 வேளையும் உணவுக்கு போராடும் போது பசி மட்டும் தான் இன்ஸ்பிரேஷன்.

இப்படிப்பட்ட கடுமையான இளமை பருத்தை கடந்து இன்று வெற்றிப்பெற்ற தொழிலகிபராக இருப்பது மட்டும் அல்லாமல் உலகளவில் பிஸ்னஸ் மற்றும் சேவை அளிப்பவர் தான் மசாரு வசாமி. காசநோயால் போராடும் தனது தாயை ஆதரிக்க வேண்டும் என 12 வயதில் காய்கறி கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 15 வயதில் முதல் முழுநேரமாக வேலை செய்யத் துவங்கும் முன் தடகள வீரராகும் கனவை கைவிட்டுவிட்டார் Masaru Wasami.
Masaru Wasami தனது முதல் முழநேர பணியில் டிரக் உதவியாளராக சேர்ந்து பின்னர் டிரக் டிரைவராக தனது வாழ்க்கையை துவங்கினார். 77 வயதான மசாரு வசாமி, இன்று 1 பில்லியன் டாலர் அதாவது 8,200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புடன் மாபெரும் லாஜிஸ்டிக்ஸ் துறை சர்ந்த தொழதிபராக உள்ளார்.
Masaru Wasami போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான AZ-COM மருவா ஹோல்டிங்ஸின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த நிறுவனத்திற்கு முந்தைய பெயர் Maruwa Unyu Kikan. 1970 இல் ஒரு டிரக் மூலம் தனது நிறுவனத்தைத் தொடங்கிய ஒரு டிரக் டிரைவர், 2014 இல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ பங்குச் சந்தையில் தனது நிறுவனத்தை பட்டியலிட்டார்.
அமெரிக்க பில்லியனர் ஜெஃப் பெசோஸ்-ன் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும், வேகப்படுத்தவும் பெரிய அளவில் உதவியது Masaru Wasami-வின் AZ-COM மருவா ஹோல்டிங்ஸ் தான். இன்றளவும் அமேசான்-க்கு முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவராக AZ-COM மருவா ஹோல்டிங்ஸ் உள்ளது.
1970 இல் ஒரு டிரக் மூலம் தனது நிறுவனத்தைத் தொடங்கிய மசாரு வசாமி சில ஆண்டுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகளை வாங்கி தனது போக்குவரத்து சேவையை விரிவாக்கம் செய்தார். ஜப்பான் நாட்டின் சில முக்கிய சூப்பர்மார்கெட் மற்றும் பார்மசி பிராண்டுகளுக்கு முக்கிய லாஜிஸ்டிக் சப்ளையராக இருந்தது இவருடைய நிறுவனம்.
2017 ஆம் ஆண்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு நாள் டெலிவரி சேவை அளிக்கும் முயற்சியில் அமேசான் தனது நிறுவனத்துடன் கூட்டுசேரச் செய்தது. இந்த ஒரு டீல் தான் மசாரு வசாமி-யை பில்லியனராக மாற்றியது. பசி, வறுமையும் கற்றுக்கொடுக்கும் பாடம் எந்த பிஸ்னஸ் ஸ்கூல்-ம் கற்றுக்கொடுக்காது என்பதற்கு மசாரு வசாமி ஒரு சிறப்பான உதாரணம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications