சமீபத்திய காலமாக சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பற்பல துறை சார்ந்த நிறுவனங்களும் வளர்ச்சியினை தாக்கத்தினை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக பல நிறுவனங்களும் செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுக்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் பிரபலமான ஈ-காமர்ஸ் தளமான ஷாப்பி, பல சந்தைகளில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வளர்ச்சியில் தாக்கம்
மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஷாப்பி, சம்பள குறைப்பு, பணி நீக்கம், குறிப்பாக மூத்த நிர்வாகிகள் சம்பளத்தில் மாற்றம், என பலவற்றை விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே ஷாப்பியின் பணி நீக்க நடவடிக்கையினால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தரப்பில் நிறுவனம் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. இதனால் வணிக மேம்பாடு மற்றும் மார்கெட்டிங், வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செயல்பாடுகள் நிறுத்தம்
ஷாப்பியின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பெரும்பகுதி வணிக மேம்பாடு மற்றும் மார்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை துறையில் இருப்பதாக தெரிகின்றது. எனினும் எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
இம்மாத தொடக்கத்தில் அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா மற்றும் மெக்சிகோவில் ஷாப்பி தனது செயல்பாடுகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு உண்டு
தகவல்கள் படி, ஷாப்பியின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தகுந்த இழப்பீட்டினை பெறுவார்கள் என சிங்கப்பூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் ஷாப்பி ப்ளூம்பெர்க்கிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் எங்கள் நடவடிக்கையானது நிறுவனம் தன்னிறைவை அடையும் வரையும் தொடரும் என்று கூறியிருந்தது. முன்னதாக இந்தோனேஷியாவை தலைமையிடமாகக கொண்ட நிறுவனம் , மொத்த ஊழியர்களில் 3% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.
பணம் கொடுங்க
இதே மற்றொரு அறிக்கையில் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சேதம் செய்த, கணினிகள் உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்துமாறு நிறுவனம் ஊழியர்களிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்கத்தில் ஷாப்பி இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் விலையில் பொருட்கள்
இந்தியாவில் பட்ஜெட் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் ஷாப்பி பிரபலமானாலும், இந்தியாவில் அதன் வணிகத்தினை நிறுத்தியுள்ளது. இது கூகுள் ஆப்பிள் பிளே ஸ்டோரிலும் இல்லை.


Click it and Unblock the Notifications