பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டார் பிளாட்பார்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் மொத்தம் 11 ஆயிரம் பேருக்கும் மேலாக பணி நீக்கம் செய்துள்ளது.
இது டெக் ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய கவலையினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், டெக் நிறுவனங்கள் பலவும் சமீபத்திய காலமாக செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
வருவாய் சரிவு
கொரோனா பெருந்தொற்று காரணமாக இணைய வணிகம் மற்றும் இணைய தேவை என்பது அதிகரித்தது. இது நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஏதும் இல்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக சர்வதேச அளவில் விளம்பரங்களுக்கான செலவினங்கள் குறைந்துள்ளன. விளம்பரங்கள் குறைவால் வருவாய் இழப்பு எதிர்பார்த்தை விட குறைந்துள்ளது. இதனால் நிறுவனம் குறைவான வருவாயினை கண்டுள்ளன.
கஷ்டத்தினை கொடுக்கும்
பணி நீக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய கஷ்டத்தினை அளிக்கும் என்பதை நான் அறிவேன். பணி நீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனினும் இத்தகைய நடவடிக்கையானது எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. பணி நீக்கத்திற்கு நான் பொறுப்பேற்கிறேன் என கூறியுள்ளார்.
பணி நீக்கம்
பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில் நிறுவனம் மேற்கோண்டு அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம். இதனால் செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலேயே மார்க் ஜூக்கர்பெர்க் செலவு குறைப்பு நடவடிக்கை குறித்து கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பணி நீக்க நடவடிக்கையானது தொடங்கியுள்ளது.
13% ஊழியர்கள் பணி நீக்கம்
நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக வளர்ச்சியினை பார்த்து வந்த நிலையில், தற்போது முதன் முறையாக இழப்பினை கண்டுள்ளது. இதுவே நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இதற்கிடையில் தான் மெட்டா நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் 13% பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
ட்விட்டரின் பணி நீக்கம்
முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்திய கையோடு எலான் மஸ்க் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தார். ட்விட்டர் அவரின் மொத்த பணியாளர்களில் 50% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கிட்டதட்ட 3700 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாஸ் லே ஆஃப்
இந்நிலையில் தான் ட்விட்டரை அடுத்து தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான, மெட்டா மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு தானே பொறுப்பு என்று மார்க் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
11,000 பேர் பணி நீக்கம்
இப்படியொரு மோசமான நிலையில் தான் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், செலவை குறைக்கும் விதமாகவும் 11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்காளுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications