கடந்த 2016ஆம் ஆண்டு சில்லறை விற்பனை வணிகத்தில் டாடா குழுமம் கொண்டு வந்த ZUDIO பிராண்ட் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது ஆண்டு வருவாய் அறிக்கை மூலம் தெரிய வ்ந்துள்ளது.
இந்தியாவின் தொழில் சாம்ராஜ்யமான டாடா குழுமம் வெஸ்ட் சைடு என்ற பிராண்டின் கீழ் ஆடை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இங்கே காஸ்ட்லியான ஆடைகளே கிடைக்கின்றன.

வெஸ்ட் சைடின் டார்கெட் ஆடியன்ஸ் என்பவர்கள் இந்திய மக்கள் தொகையில் சிறு எண்ணிக்கை தான். இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆடைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம். எனவே பட்ஜெட் விலை ஆடை விற்பனை சந்தையை கைப்பற்றும் நோக்கில் 2016ஆம் ஆண்டில் ZUDIO என்ற பிராண்டை டாடா அறிமுகம் செய்தது.
டாடாசின் ட்ரெண்ட் நிறுவனத்தின் கீழ் பட்ஜெட் விலையில் நவீன ஆடைகளை விற்பனை செய்வதற்காக ஸூடியோ சில்லறை விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. இந்த பிராண்டு தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தற்போது வெஸ்ட் சைடை விட அதிக கடைகளை கொண்ட பிராண்டாக ஸூடியோ மாறி இருக்கிறது. 2024ஆம் நிதியாண்டில் ஸூடியோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் 90 டி-ஷர்ட்டுகள் விற்பனை செய்துள்ளது ட்ரெண்டின் ஆண்டு நிதி அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஸூடியோ பிராண்டின் கீழ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களை இலக்காகக் கொண்டு இந்த கடைகள் செயல்படுகின்றன. தற்போது டாடா குழுமத்தில் சிறந்த வருவாய் ஈட்டும் பிராண்டாக ஸூடியோ பேர் பெற்றுள்ளது.
வெஸ்ட் சைடுக்கு 91 நகரங்களில் 232 கடைகள் இருக்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸூடியோவிற்கு 161 நகரங்களில் 545 கடைகள் உள்ளன.
2024 ஆம் நிதியாண்டில் மட்டும் ஸூடியோ 46 நகரங்களில் கடைகளை திறந்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு நிமிடத்திற்கு 90 டி-ஷர்ட்டுகள், ஒரு மணி நேரத்திற்கு 60 டெனிம்களை இந்த பிராண்ட் விற்பனை செய்துள்ளது. புது புது கலெக்ஷன்களோடு பட்ஜெட் விலையில் குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களில் தங்களது கடைகளை நிறுவியது தான் இந்த வெற்றிக்கு காரணம் என ட்ரெண்ட் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸூடியோ ஓரிடத்தில் கடையை நிறுவ, செலவின மூலதனம் ,டெபாசிட் மற்றும் இன்வென்ட்ரி உள்ளிட்டவற்றுக்காக 3 -4 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இவர்களின் டார்கெட் இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் இளைஞர்கள்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 86 கடைகளும், குஜராத் மாநிலத்தில் 82 கடைகளும் உள்ளன. அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் 58 கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications