தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கோயம்புத்தூர் ஏற்கனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெயர் பெற்ற நகரம். இங்கே உற்பத்தியை தாண்டி தற்போது ஐடி சார்ந்த வேலைகள் மற்றும் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
டெக் நிறுவனங்களுக்கான மையமாக கோயம்புத்தூர் படிப்படியாக உருவெடுத்து வருகிறது. அதற்கேற்ப தமிழ்நாடு அரசும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள், திறமையான மனித வளம் , தொழில் தொடங்க சாதகமான சூழல், அலுவலகங்களை அமைக்க சலுகை என பல்வேறு சௌகரியங்களும் இருப்பதால் பல்வேறு ஐடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகத்தை கோயம்புத்தூரில் நிறுவி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து ஜிசிசி மையங்களும் விருப்பமான இடமாக கோயம்புத்தூர் இருக்கிறது. இந்த நிலையில் உலகளாவிய டெக் ஜாம்பவானாக கருதப்படும் ஐபிஎம் நிறுவனம் கோயம்புத்தூரில் மேற்கொண்டு தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்கு முன் வந்துள்ளது. கோயம்புத்தூரில் ஏற்கனவே ஐபிஎம் அலுவலகம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் ஐபிஎம் நிறுவனம் கோயம்புத்தூரில் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்தது.
கேஜிஐஎஸ்எல் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் இருக்கும் இந்தியா லேண்ட் டெக் பார்க் வளாகத்தில் ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 600 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. இந்த சூழலில் கோயம்புத்தூரில் மேலும் தங்களுடைய இருப்பை விரிவாக்கம் செய்வதாக ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதே பகுதியில் ஐபிஎம் நிறுவனம் கூடுதலாக 26,500 சதுர அடி பரப்பளிலான அலுவலக தளத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 550 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் இந்த பகுதியில் ஐபிஎம் நிறுவனம் அலுவலகத்தை அமைக்க இருக்கிறது. கோயம்புத்தூரில் ஐபிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக தன்னுடைய இருப்பை வலுப்படுத்த முடிவெடுத்து இருப்பது கோவை இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது.
ஐடி வேலைகளுக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. சொந்த ஊரிலேயே இளைஞர்களுக்கு ஐடி வேலைகள் கிடைக்கும். கோவை நகரம் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்வதற்கு இது உதவும். ஐபிஎம் நிறுவனம் தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேற்கொண்டு பல நிறுவனங்களும் கோவையை நோக்கி படையெடுக்கும்.
வளர்ச்சி சென்னையோடு நின்றுவிட கூடாது என்பதற்காக அரசு மற்ற நகரங்களிலும் நிறுவனங்கள் அலுவலகத்தை தொடங்குவதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருகிறது. எனவே பெரிய நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகின்றன.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications