இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை ஐடி நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குறிப்பாக முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ பங்குகள் ஒரே நாளில் பெரிதும் வீழ்ச்சி கண்டது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஐடி சேவை துறையின் வர்த்தக மாடலை புரட்டிப்போடப்பட உள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானம், லாரம் ஆகியவை கடுமையாக பாதிக்குமோ என்ற அச்சமே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்றைய மோசமான சரிவுக்கு வித்திட்டது அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட இந்திய ஐடி நிறுவனங்களின் ADR பங்குகள் தான், நேற்று அமெரிக்க வர்த்தகத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் ADR-கள் 10% வரை சரிந்தது. Anthropic ஏஐ சேவைகள் மற்றும் உலகளாவிய டெக் முதலீட்டாளர்கள் மத்தியில் நடக்கும் மாற்றங்கள் ஆகியவை இந்திய பங்குச்சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.

இன்போசிஸ் - விப்ரோ படுமோசம்
இந்த பின்னணியில், இந்திய பங்குச் சந்தையில் இன்று இன்போசிஸ் பங்கு 5.51% சரிந்து ரூ.1,310 ஆக உள்ளது. இன்றைய நேரத்தில் சுமார் 7% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விப்ரோ பங்கு 3.37% சரிந்து ரூ.211.70 ஆகக் குறைந்தது. இதோடு டிசிஎஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா, Coforge, Persistent Systems மற்றும் LTIMindtree போன்ற நிறுவனங்களும் கடுமையான பங்கு விற்பனை அழுத்தத்தை சந்தித்து, பங்கு விலை சரிய துவங்கியது.
Nifty IT குறியீடு தரைதட்டியது
Nifty IT குறியீடு தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை பதிவு செய்துள்ளது. மேலும் கடந்த 8 வர்த்தக நாட்களில் மட்டும் அது 19% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் 250 பில்லியன் டாலர் மதிப்புடைய மென்பொருள் சேவைத் துறை, வெறும் 8 நாட்களில் ரூ.5.7 லட்சம் கோடி மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இது முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பில் பெரும் ஓட்டையை உருவாக்கியுள்ளது. இதை பார்க்கும் போது சமீபத்திய பைபேக் திட்டத்தில் பங்குகளை விற்ற முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.
டிசிஎஸ் பெரும் இழப்பு
இந்த 8 நாட்களில் இன்போசிஸ் 21% சரிந்துள்ளது. டிசிஎஸ் 19% வீழ்ந்துள்ளது. ஹெச்சிஎல் 17% குறைந்துள்ளது. விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா தலா 13% வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக டிசிஎஸ் பங்கு, 2024 ஆகஸ்ட் மாதத்தில் எட்டிய உச்சத்திலிருந்து தற்போது 44% குறைந்துள்ளது. இதனால் அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கும் கீழே சரிந்துள்ளது, இது 2020க்குப் பிறகு காணப்படும் நிலை.

Anthropic-ன் வெறியாட்டம்
இதற்கான காரணம், AI நிறுவனமான Anthropic அறிமுகப்படுத்திய புதிய Claude chatbot plugins மற்றும் Claude Opus 4.5 போன்ற மேம்பட்ட AI மாடலின் வெற்றி தான்.
Claude chatbot plugins பல பணிகளை எளிதாக ஆட்டோமேட் செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் காரணத்தால் உலகளவிய நிறுவனங்கள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என கணிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் அடிப்படையில் வருமானம் ஈட்டும் இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்கால வருவாய் குறையக்கூடும் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும், Anthropic நிறுவனம் 30 பில்லியன் டாலர் முதலீட்டை 380 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பெற்றதாகவும், அதன் வருடாந்திர வருவாய் ஓட்டம் (run-rate revenue) 14 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் டேட்டா சென்டர்களுக்கான மின்சார கட்டண உயர்வையும் தாங்களே ஏற்கவுள்ளதாக கூறியிருப்பது, AI துறையின் விரைவான வளர்ச்சியை காட்டுகிறது. இதுவே இந்திய ஐடி நிறுவனங்களுக்கு போட்டி அதிகரிக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

முதலீட்டாளர்கள் அடுக்கும் கேள்விகள்
முதலீட்டாளர்களை அதிகமாகப் பதறவைக்கும் கேள்வி இதுதான்: AI கருவிகள் பல வழக்கமான கோடிங் (coding), சோதனை (testing), ஆலோசனை (consulting) போன்ற பணிகளை தானாக செய்யத் தொடங்கினால், மனித பணியாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் வசூலிக்கும் இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானம் குறையுமா?
இதற்கு மேலாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவு வலுவாக வந்துள்ளது. வேலை இழப்பு விகிதம் குறைந்திருப்பதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு தாமதமானால், உலகளாவிய பங்குச் சந்தைகளில் அழுத்தம் நீடிக்கும். இதுவும் தற்போது ஐடி பங்குகளில் கூடுதல் விற்பனைக்கு வழிவகுக்கிறது.
தற்போது சந்தையில் நிலவும் முக்கிய சந்தேகம், இது வெறும் பீதி விற்பனையா? அல்லது இந்திய ஐடி துறைக்கு முன் நிற்கும் மிகப்பெரிய வீழ்ச்சியின் துவக்கமா..? என்பது தான் ஏற்கனவே கோடிக்கணக்கான முதலீட்டு மதிப்பு அழிந்துள்ள நிலையில், இந்த பங்குகள் எப்போது சரிவில் இருந்து மீண்டு நிலைபெறும் என்பது முதலீட்டாளர்களின் அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

தமிழ்நாடு ஐடி துறைக்கு பெரும் அதிர்ச்சி
தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான IT மையம். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, HCL Tech போன்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். AI கருவிகள் பணிகளை தானியங்கி செய்யத் தொடங்கியால், குறிப்பாக ஃப்ரெஷர்கள் மற்றும் நடுத்தர ஊழியர்களுக்கு பணிநீக்க அச்சம் அதிகரிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications