இந்திய மக்கள் அனைவரும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்துத் தொடர்ந்து பேசி வரும் வேளையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு லிட்டர் பால் விலை நவம்பர் 1ஆம் தேதி முதல் 8 ரூபாய் உயர்த்த அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று மாலை வெளியிடப்பட அறிக்கையில், தற்போது அதிகரிக்கப்படும் பால் விலையில் 8 ரூபாய் விவசாயிகளுக்கும், 1 ரூபாய் கூட்டுறவு அமைப்புக்கும் செல்ல உள்ளதாகக் கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அரசு கொள்முதல் செய்யும் பாலின் விலையைக் குறைந்தது லிட்டருக்கு 10 ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்த நிலையில் இன்று 8 ரூபாய் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு 35 ரூபாயும், கர்நாடக மாநில அரசின் ஊக்கத் தொகையாக 5 ரூபாயும், புதிய விலை உயர்வில் 8 ரூபாயில் 7 ரூபாயும் சேர்ந்து மொத்தம் லிட்டருக்கு 47 ரூபாய் பெற உள்ளனர்.
இந்த விலை உயர்வு கட்டாயம் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். இதன் மூலம் கர்நாடக மக்கள் வாங்கும் நீல கலர் பால் பாக்கெட் விலை 46 முதல் 54 ரூபாயாக உயரும். இது நுகர்வோருக்கு பெரும் நிதிச் சுமையாக மாறும்
பால் விலை உயர்வு குறித்து கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறுகையில், பால் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மாடுகளுக்கான தீவனம் முதல் எரிபொருள் செலவு உட்பட அனைத்து செலவுகளும் அதிகரித்திருக்கும் வேளையில் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்த போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்திற்குக் கர்நாடக நாடாளுமன்ற அளவில் ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், KMF போன்ற பால் வள அமைப்புகளும் விலை உயர்வுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன் பின்பு 2-3 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கையான 10 ரூபாய் உயர்வை முழுமையாக ஏற்க முடியாத நிலையில் தற்போது லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோல் பால் விலை உயர்வு தொடர்பான முடிவுக்கு அமைச்சரவை குழுவில் அனைவரும் ஒப்புதல் அளித்தாகவும் கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications