டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் பணியிடமாற்றம் தொடர்பான விவகாரம் அதிகம் கவனத்தை பெற்றுள்ளது. layoffs.fyi என்ற பணியிட மாற்றம் கண்காணிக்கும் தளத்தின் தரவுகள் படி, 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 176 தொழில்நுட்ப நிறுவனங்களில் 80,845 தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிட மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனம், 2026 நிதியாண்டில் தனது பணியாளர்களில் 2% நீக்கத்தை அறிவித்துள்ளது. இதனால், 12,200 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இது TCS நிறுவனத்தின் பெரும் பணியிடமாற்றத் திட்டமாகும். பணியிட மாற்றங்கள் தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பணியாளர்களின் வாழ்கை பாதிப்பு தவிர, நிறுவனங்களின் நிர்வாகத் திட்டங்களிலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் மட்டும் 25,000 ஊழியர்கள் பல பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து வேலை இழந்துள்ளனர். பணியிட மாற்றம் நடந்த முக்கிய நிறுவனங்களில் Microsoft, Google, Amazon, Panasonic போன்றவை அடங்கும். இந்த பணியிட மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைந்துள்ளது. ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பணியிடங்கள் குறைவதால், ஐடி துறையில் பெரும் மாற்றங்கள் வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தில் புதிய சவால்கள் உருவாகி உள்ளன.
2025ஆம் ஆண்டில் 80,845 பேரும், 2024ஆம் ஆண்டில் 1,52,922 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,64,220 பேரும், 2022ஆம் ஆண்டில் 1,65,269 பேரும் வேலையை இழந்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றத்தினை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 15,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இது மைக்ரோசாஃப்ட் உலகளாவிய பணியாளர்களின் 7% ஆகும்.
அமேசான் நிறுவனத்தின் Devices and Services பிரிவில் சுமார் 100 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். அதேபோல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கூகுள் நிறுவனம் தனது Global Business Unit இல் இருந்து சுமார் 200 பணியாளர்களை வேலை இழக்க செய்தது. 2023 ஜனவரியில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் உலகளாவிய பணியாளர்களில் இருந்து 12,000 பேரை, அதாவது 6% பணியாளர்களை, குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் மெட்டா நிறுவனம், தனது குறைந்த செயல்திறன் கொண்ட 5% ஊழியர்களை வேலை இழக்க செய்தது.
இதுதொடர்பாக பேசியுள்ள அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஏஐ தொழில்நுட்பத்தால், அடுத்த சில ஆண்டுகளில் பணியாளர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது செய்யப்படும் சில பணிகள் குறைவாக நபர்களால் செய்யப்படும். அதே சமயம் வேறு விதமான பணிகளை செய்யும் நபர்கள் அதிகரிக்கும். இது எவ்வளவு பணியாளர் எண்ணிக்கையை பாதிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், சில ஆண்டுகளில் ஏஐ பயன்படுத்துவதால் எங்கள் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் CEO டேவிட் சாலமன் கூறுகையில், "ஒரு வேலையை 6 பேர் சேர்ந்து 2 வாரத்தில் முடிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது, அதே வேலையை ஏ.ஐ சில நிமிடங்களில் செய்து முடிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications