வாடகை வீடுகளில் வசிக்கும் பலருக்கு சொந்தமாக ஒரு குடிசையாவது கட்டி அதில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்து வருகிறது. அதற்காக சிலர் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குகின்றனர். இருந்தாலும் விலைவாசி உயர்வு, ரியல் எஸ்டேட் விலை உயர்வு போன்றவை வீடு வாங்குவதற்கு ஏதுவாக இல்லை. சரி கடன் வாங்கியாவது வீடு வாங்கலாம் என்றால் ஈஎம்ஐ சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு ஏன் கடன் வாங்கினோம்? என்று யோசிக்கத் தொடங்குகின்றனர்.
எனவே இது போன்ற சிக்கலில் சிக்குவதற்கு முன் உங்களுடைய தனிப்பட்ட நிதியின் அடிப்படை விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த நேரத்தில் எவ்வளவு கடன் வாங்க வேண்டும்? எவ்வளவு கடன் வாங்கினால் வரும் வருமானத்திற்கு ஈஎம்ஐ செலுத்த முடியும் என்ற பல விஷயங்களைக் கவனித்து தான் லோன் பெற வேண்டும். சரியான திட்டமிடல் இருந்தால் போதும் எளிதில் லோன் பெற்று வீடு வாங்கி ஈஎம்ஐ செலுத்துவதை எளிதில் சமாளிக்க முடியும்.

இந்தப் பதிவில் வீட்டுக் கடன் பெறுவதற்கான அடிப்படை ஃபார்முலா குறித்து தான் பார்க்கவுள்ளோம். வீடு வாங்குவதற்கு கண்டிப்பாக அதிக பணம் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான மக்கள் இதற்காக வீட்டுக் கடனை தான் நாடுகின்றனர். வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன். அதோடு ஒரு மாத ஈஎம்ஐ தொகையைச் செலுத்தவில்லை என்றாலும், அதற்கு வட்டியையும் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டி வரலாம்.
எனவே லோன் பெற முடிவெடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதியை எவ்வாறு நிர்வகிக்க போகிறீர்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டு கடன் பெறுவதற்கு என்று ஒரு ஃபார்முலா உள்ளது. அந்த ஃபார்முலாவைப் பின்பற்றி கடன் வாங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஈஎம்ஐ ஒருபுறம் செலுத்திக் கொண்டிருந்தாலும், மறுபுறம் உங்களுடைய செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள முடியும்.
50:30:20: இந்த பார்முலாவில் உள்ள முதல் 50 என்பது அத்தியாவசிய செலவுகளைக் குறிக்கிறது. உதாரணமாக வாடகை, பில்கள், ஈஎம்ஐ, மளிகை பொருட்கள் போன்றவற்றுக்கு உங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தை பயன்படுத்த வேண்டும். 20 சதவீதத்தை ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்ய பயன்படுத்த வேண்டும். அரசாங்கத் திட்டங்களான பிபிஎப், பெண் குழந்தை வைத்திருந்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா, ஆண் குழந்தை இருந்தால் செல்வ மகன் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் சேமிக்கலாம். மீதமுள்ள 30 சதவீதத்தை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். உங்களுக்கு ரூ.1 லட்சம் வருமானம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் அத்தியாவசிய செலவுகளுக்காக ரூ.50,000-த்தை பயன்படுத்த வேண்டும் இந்த 50,000 ரூபாய்க்குள் தான் உங்கள் வீட்டுக் கடன் ஈஎம்ஐ-யும் செலுத்த வேண்டும். உங்கள் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தால் 50:30:20 விதியின்படி உங்கள் மொத்த ஈஎம்ஐ தொகை ரூ. 30,000-த்தை தாண்டக்கூடாது.
ரூ.50,000-த்தில் மீதமுள்ள 20,000 ரூபாயில் பிற அத்தியாவசிய செலவுகளை அடக்க வேண்டும். 20,000 ரூபாயை ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 30,000 ரூபாயை பிற்காலச் செலவுகளுக்காக பயன்படுத்தலாம். எனவே இது போன்ற ஃபார்முலாக்களை பயன்படுத்தி உங்கள் நிதி நிலையை தெரிந்து கொண்டு கடன் பெற்றால் ஈஎம்ஐ செலுத்துவதை திறம்பட சமாளிக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications