சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தீவிர ரசிகரா நீங்கள்? கேப்டன் கூல் தல தோனியின் தீவிர ரசிகராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு தான் இந்த பதிவு., மகேந்திர சிங் தோனியின் நம்பரான நம்பர் 7 ஜெர்சியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள அருமையான வாய்ப்பை சிட்டி யூனியன் பேங்க் வழங்குகிறது. CSK அணியின் ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரெடிட் கார்டின் பெயர் CSK மாஸ்டர்வேர்ல்ட் பிளாட்டினம் கிரெடிட் கார்டு.
மாஸ்டர்கார்டு என்ற சர்வதேச நிறுவனத்தின் நெட்ஒர்க் மூலம் இந்தக் கிரெடிட் கார்டு கிடைக்கிறது. இந்தக் கிரெடிட் கார்டை ஆசிய பிராந்தியம் முழுவதும் பயன்படுத்த முடியும். CSK மாஸ்டர்வேர்ல்ட் பிளாட்டினம் கிரெடிட் கார்டுக்கு ஏராளமான சலுகைகளும் கிடைக்கும். மாஸ்டர்கார்டு ஒன் டைன்ஸ் ஃப்ரீ, மாஸ்டர்கார்டு ஒன் நைட் ஃப்ரீ மற்றும் மாஸ்டர்கார்டு கலினரி கிளப் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாஸ்டர்கார்டு ஒன் டைன்ஸ் ஃப்ரீ என்ற சலுகையைப் பயன்படுத்தி ஆசியாவில் உள்ள பிரபலமான உயர்ரக உணவுகளில் எங்கு வேண்டுமானாலும் உணவருந்தலாம். இதனால் மெயின் கோர்ஸ் டிஷ் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதேபோல மாஸ்டர்கார்டு ஒன் நைட் ஃப்ரீ என்பது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள சலுகையாக இருக்கும். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மாஸ்டர்கார்டுடன் இணைந்த ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் ஒரு இரவுக்கான தங்கும் கட்டணம் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மாஸ்டர்கார்டு கலினரி கிளப் சலுகையைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில், நீங்கள் உணவு உண்ணும்போது 30 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
இந்தக் கிரெடிட் கார்டு மூலம் உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் இலவசமாக ஓய்வறையைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மாஸ்டர் வேர்ல்ட் மற்றும் மாஸ்டர் கிரெடிட் கார்டு என்றால் என்ன?: 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று மாஸ்டர்கார்டு வெளியிட்ட செய்தியின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மாஸ்டர் வேர்ல்ட் மற்றும் மாஸ்டர் கிரெடிட் கார்டை, மாஸ்டர்கார்டு நிறுவனமும், சிட்டி யூனியன் பேங்கும் இணைந்து வழங்குகின்றன.
இவை குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் அதுவும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை தீவிரமாக ரசிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர்கார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்த வகை கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் பல பிரத்யேக வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
IPL அணியை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு மற்றும் IPL போட்டிகளுக்காக பயிற்சி பெறும் போது பயிற்சியை பார்க்கும் வாய்ப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த கிரெடிட் கார்டின் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணி மற்றும் தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications