உலகின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்ட், பணப் பரிமாற்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பழைய ஸ்வைப் முறையை முழுமையாக நீக்கவும் அடுத்த 10 வருடத்திற்குள் கிரெடிட் - டெபிட் கார்டில் இருக்கும் மேக்னடிக் பட்டையை முழுமையாக நீக்கவும் திட்டமிட்டுள்ளது.
முதல் பேமெண்ட் நெட்வொர்க்
1960ஆம் ஆண்டு மாஸ்டர்கார்ட் நிறுவனம் முதல் முறையாக அறிமுகம் செய்த தனது பேமெண்ட் நெட்வொர்க் திட்டத்தில் இருந்து இந்த மேக்னடிக் பட்டை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் உள்ளது.
மேக்னடிக் பட்டை
இந்த மேக்னடிக் பட்டையில் தான் வங்கிகள் வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பதிவு செய்து பணப் பரிமாற்றத்தை டிராக் செய்து வருகிறது. ஆனால் இன்று வேகமாக வளர்ந்து வரும் கார்டு டெக்னாலஜி மூலம் இந்த மேக்னடிக் பட்டை தற்போது முற்றிலும் தேவையற்றதாக மாறியுள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் சந்தை
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில், கார்டு பேமெண்ட் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் புதுமைகளையும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும்.
கார்டு டெக்னாலஜி
இன்றைய கார்டு டெக்னாலஜிகளான கான்டெக்ட்லெஸ் பேமெண்ட்ஸ், மைக்ரோசிப், பயோமெட்ரிக் போன்ற புதிய சேவைகளைக் கட்டாயம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதனால் மேக்னடிக் பட்டை தற்போது தனது expiration date-ஐ அடைந்து வருவதாக மாஸ்டர்கார்ட் அறிவித்துள்ளது.
2024 முதல் ஆரம்பம்
தற்போது அளிக்கப்பட்டு வரும் அனைத்துக் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட்களுக்கும் மேக்னடிக் பட்டை உடன் தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாஸ் 2024 முதல் இந்த மேக்னடிக் பட்டை வங்கிகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன் ஆக அளிக்கப்படும். 2029ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக மேக்னடிக் பட்டை பயன்பாடு நிறுத்தப்படும்.
10 வருட காலம்
2033 முதல் மேக்னடிக் பட்டை கொண்ட கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாட்டை 100 சதவீதம் நீக்க முடியும். இந்த 10 வருட காலத்தில் வங்கிகள் மற்றும் பேமெண்ட் தளங்கள் சிப் கார்டு பயன்பாட்டுக்கு மாறுவதற்குப் போதுமான காலம் அளிக்கப்பட்டு உள்ளது.
சிப் கார்டுகள் அடிப்படை
இந்திய வங்கிகளில் தற்போது சிப் கார்டுகள் தான் தற்போது அடிப்படை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சிப் கார்டு இல்லாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் புதிதாகச் சிப் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதலான பாதுகாப்பு
மேக்னடிக் பட்டை கொண்ட கார்டுகளை விடவும் சிப் கார்டுகள் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை, இத்தகைய கார்டுகள் ஒவ்வொரு முறையும் பணப் பரிமாற்றம் செய்யப்படும் போது தனிப்பட்ட பரிமாற்ற எண்-ஐ வங்கியில் உருவாக்குகிறது.
தகவல் திருட்டு
அனைத்தையும் தாண்டி சிப் கார்டுகளைப் போலியாகத் தயாரிப்பது மிகவும் கடனம், இதனால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். இதோடு சிப் கொண்ட கிரெடிட் கார்டு தரவுகளையும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும்.


Click it and Unblock the Notifications