மாஸ்டர்கார்டு பணமில்லா கட்டண சேவைகளை வழங்குகிறது. இதில் கடன் அட்டைகள்,டெபிட் கார்டுகள், ப்ரீபெய்ட் கார்டுகள், பரிசு அட்டைகள் போன்றவை உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு மாஸ்டர்கார்டு அட்டை பரிவர்த்தனையும் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கில் நடைபெறுகிறது,
மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டு என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சேவையாகும், மேலும் இது உலகளவில் அதிக பயனர் தளங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் மாஸ்டர்கார்டு தனது நெட்வொர்க்கில் சில கிரிப்டோகரன்ஸிகளையும் பரிவர்த்தனை செய்ய அட்டைதாரர்களுக்கு அனுமதிக்க தொடங்குவதாக அறிவித்துள்ளது.
பல நாடுகளுடன் பேச்சு வார்த்தை
எதிர்கால பயன் கருதி நாங்கள் இப்போதே தயாராகி வருகிறோம். இந்த ஆண்டு முதல் சில கிரிப்டோகரன்சிகளை அனுமதிக்க உள்ளதாகவும் மாஸ்டர்கார்டு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் புதிய டிஜிட்டல் நாணயங்களை தொடங்குவதற்கான திட்டங்களில், உலகின் பல மத்திய வங்கிகளுடன் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் கார்டின் செம திட்டம்
அதோடு மாஸ்டர் கார்டு தனது சொந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளது. மாஸ்டர்கார்டு நிறுவனம் ஏற்கனவே வயரெக்ஸ் மற்று பிட்பே உள்ளிட்ட சில கிரிப்டோகரன்சி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. டிஜிட்டல் சொத்துக்களை ஆதரிப்பதற்கான எங்களது மாற்றம், இன்னும் பலரையும் ஈர்க்கும். இது கிரிப்டோவையும் அனுமதிக்கும்.
மாஸ்டர் கார்டு
இந்த வாரத்தில் டெஸ்லா இன்க் நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டினை பிட்காயினில் செய்ததாக அறிவித்தது. இதற்கிடையில் பிட்காயின் மதிப்பு அதன் சாதனை அளவினை எட்டியது. இதற்கிடையில் தான் தற்போது மாஸ்டர்கார்டின் அறிவிப்பும் வந்துள்ளது. கிரிப்டோகரன்சியை வாங்க உங்களை மாஸ்டர்கார்டு கூறவில்லை.
இந்த சேவை எதற்காக?
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இந்த சேவையையும் எங்களால் வழங்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவையை ஊக்குவிப்பதற்கே, இந்த சேவையை தொடங்க உள்ளதாகவும் மாஸ்டர்கார்டு தெரிவித்துள்ளது.
இது செம மாஸ்டர் பிளான் தான. உண்மையில் இது இன்னும் டிஜிட்டல் நாணயங்களை ஊக்குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications