திருமணத்திற்கு வரன் பார்த்து.. திருமணச் செலவுக்கு பணமும் வழங்கும் மேட்ரிமோனி நிறுவனம்..! அடடே!

திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்கள் முன்பு நேரடியாக பெண் வீட்டிற்கோ அல்லது மாப்பிள்ளை வீட்டிற்கோ சென்று பார்ப்பது வழக்கம். ஆனால் இன்றைய நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதன் காரணமாக வீட்டில் இருந்தே பல்வேறு இணையதளங்களின் மூலம் வரன் தேடுகின்றனர். வரன் தேடுபவர்களுக்கு இந்த நிறுவனங்கள் இணையதளங்களை வழங்கியுள்ளது. முதலில் வரன் தேடுபவர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்த செயல்முறை முடிந்த பிறகு இணையதளத்தில் ஏற்கனவே பதிந்திருக்கும் வரன்களை பார்க்க முடியும். இப்படி வரன்களை மட்டும் அமைத்துக் கொடுத்த நிறுவனம் ஒன்று திருமணத்திற்கு தேவையான லோனையும் வழங்க இருக்கிறது.

 திருமணத்திற்கு வரன் பார்த்து.. திருமணச் செலவுக்கு பணமும் வழங்கும் மேட்ரிமோனி நிறுவனம்..! அடடே!

மேட்ரிமோனி டாட் காம் என்ற நிறுவனம் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனம். தற்போது இந்த நிறுவனம் ஐடிஎப்சி, டாட்டா கேபிட்டல், லார்சன் & டூப்ரோ ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து திருமணத்திற்கான கடன்களை வழங்கி வருகிறது. மேட்ரிமோனி டாட் காம் இந்த 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான முருகவேல் ஜானகிராமன், "எங்கள் நிறுவனம் கடந்த 20 வருடங்களாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சரியான துணையை கண்டுபிடிக்க உதவி வருகிறது. மில்லியன் கணக்கான மக்களுக்கு நாங்கள் நம்பிக்கையான கூட்டாளியாக இருக்கிறோம். WeddingLoans.com மூலம் திருமணத்தை திட்டமிடுதல், வரவு செலவு திட்டம் போன்ற செயல்முறைகளை எளிதாக்க இந்தச் சேவையை விரிவுபடுத்தியுள்ளோம்", என்று கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் திருமண செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் சமூக ஊடகங்களில் ஆடம்பரமான திருமணங்கள் பிரபலமாகி இருப்பதாலும் பல தம்பதிகள் தங்கள் திருமணத்திற்கு தனி நபர் கடனை தேர்வு செய்கின்றனர். இதனால் தங்கள் கையில் பணம் இல்லாத பலர் அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு WeddingLoans.com உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல எப்படி கடன் பெற்று திருப்பி செலுத்த வேண்டுமோ அதே போல இந்த இணையதளத்திலும் விண்ணப்பித்து கடன் பெற்று திருப்பி செலுத்தலாம்.

திருமணத்திற்காக கடன் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் எங்கு கடன் வாங்கினாலும் அதை வட்டியுடன் சேர்த்து நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொண்டு செலவு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+