உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு விநோதமான வேலைவாய்ப்பை அறிவித்து டிரெண்டாகி கொண்டு இருக்கிறது, உதாரணமாக மெத்தை தயாரிக்கும் நிறுவனம் 30 நாள் முதல் 3 மாதம் வரையில் தூங்குவதற்கு பெரிய சம்பளம் கொடுத்து ஊழியர்களை நியமிக்கும், இதேபோல் ஒரு முறை ஆபாச வீடியோக்களை பதிவிடும் ஒரு தளம் வெறுமென வீடியோ பார்க்க ஊழியர்களை நியமித்தது.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில் அமெரிக்காவில் 1945 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றும் பிரபலமான பொம்மை மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக இருக்கும் Mattel இன்க் என்னும் நிறுவனம் சீட்டு விளையாட ஆட்களை தேடி வருகிறது. இதற்கு பெரும் சம்பளத்தை கொடுக்கவும் தயாராக உள்ளது Mattel.

Mattel நிறுவனம் Chief UNO Player என்ற பதிவிக்கு ஊழியர்களை தேடி வருகிறது, இந்த பதவியில் Mattel நிறுவனத்தின் புதிய UNO Quatro விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது தான் பணி, இதற்கு தேர்வு செய்யப்படும் நபர் முகம் தெரியாத நபருடன் இந்த புதிய கேம்-ஐ விளையாட வேண்டும்,
ஒரு வாரத்திற்கு, 4 நாள் வேலைக்கு வந்தால் போதுமானது. 4 வாரம் கான்டிராக்ட் கொண்ட இந்த வேலைக்கு வாரம் 4444 டாலர் சம்பளம் கொடுக்க தயாராக உள்ளது Mattel நிறுவனம், அப்படியானால் இந்திய ரூபாயில் 3.6 லட்சம் ரூபாய், அப்போ மாதத்திற்கு 14.4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

Chief UNO Player பதவியில் நியமிக்கப்படுபவர் ஒரு நாளுக்கு கட்டாயம் 4 மணிநேரம் UNO Quatro கேம் விளையாட வேண்டும், அவருடன் விளையாட வரும் நபர்களுக்கு இந்த விளையாட்டின் விதிமுறைகளை விளக்கி அவர்களுடன் விளையாடுவது தான் இந்த பணியில் அடிப்படை பொறுப்புகள்.
கரும்பு தின்னக் கூலியா என்பது போல் ஜாலியாக ஒரு நாளுக்கு 4 மணிநேரம் விளையாடுவதற்கு 15 லட்சம் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. Mattel நிறுவனத்தின் புதிய UNO Quatro விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியாக Chief UNO Player என்ற பெயரில் வேலைவாய்ப்பு கொடுத்து வேலை கொடுக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications