சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் வருமான வரி ஸ்லாப்ளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் வரி செலுத்துவோருக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும் திருத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறையும் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய வரி முறை தனிநபர்களுக்கு தங்கள் வரி கடமையிலிருந்து சற்று ஓய்வு பெற பெரிதும் உதவுகிறது.
இந்த பதிவில் திருத்தப்பட்ட புதிய வரிமுறையின் முக்கிய அம்சங்கள் என்ன? அதனால் தனிநபர்களுக்கு என்னென்ன நன்மைகள்? வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

புதிய வரிமுறையின் கீழ் ரூ. 12.75 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கும் வருமான வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டு வருமானம் ரூ. 12.75 லட்சத்திற்குள் இருந்தால் எந்த ஒரு வரியும் செலுத்த வேண்டியதில்லை.
வருமானவரி அடுக்குகளில் மாற்றம் செய்ததன் மூலம் வரி செலுத்துவோருக்கு மேலும் சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 30 சதவீத வரி ரூ.15 லட்சம் ஆண்டு வருமானத்திற்கே விதிக்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட இந்த புதிய வரி விதிப்பு முறையில் 30 சதவீத வரி ரூ. 24 லட்சம் ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு தான் விதிக்கப்படுகிறது. இப்படி பல நன்மைகள் இந்த புதிய வரி முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட வரி விதிப்பு முறை 2025 முதல் 2026-ஆம் நிதியாண்டில் ஈட்டப்படும் வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும். 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரையில் வரி செலுத்துவோர் முந்தைய வரி முறையின் படி தான் வரி செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்தும் வரி செலுத்தலாம். இந்த திருத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் வரியை சேமிக்க முடியும்.
திருத்தப்பட்ட வரி விதிப்பில் என்னென்ன மாற்றங்கள்?: ரூ. 4 லட்சம் வருமானம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. ரூ. 3 லட்சத்திற்கு பதிலாக ரூ. 4 லட்சத்திலிருந்து தான் தற்போது 5 சதவீத வரி ஸ்லாப் தொடங்குகிறது. அதேபோல இதற்கு முன்னர் இருந்து ரூ. 7 லட்சத்திலிருந்து, ரூ. 8 லட்சம் வருமானத்திலிருந்து தான் 10 சதவீத வரி ஸ்லாப் தொடங்குகிறது. இதற்கு முன்னர் ரூ.10 லட்சமாக இருந்த 15 சதவீத வரி வரம்பு இப்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 8 லட்சம், ரூ. 12.80 லட்சம் மற்றும் ரூ.15.25 லட்சம் சம்பளம் பெறும் தனிநபர்கள் பழைய வரி முறை, புதிய வரி முறை மற்றும் திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ் எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்பது குறித்து பார்ப்போம்.
ரூ. 8 லட்சம் வருமானம்: ஒருவர் ரூ. 8 லட்சம் வருமானம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் பழைய வரிமுறையை தேர்ந்தெடுத்திருந்தால்.. ஆண்டுக்கு 65,000 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய வரி முறையில் இந்த விகிதம் சற்று குறைந்து ரூ.23,400-ஆக இருக்கும். அதுவே திருத்தப்பட்ட புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால் எந்தவித வரியும் செலுத்த தேவையில்லை. ஆக திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ் ஒருவர் 65,000 வரை அதிகபட்சமாக வரி சேமிக்க முடியும். இதனால் மாதத்திற்கு ரூ.5,417 மிச்சமாகும்.
ரூ. 12.80 லட்சம் வருமானம்: ஒருவர் ரூ. 12.80 லட்சம் வருமானம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்திருந்தால்.. ஆண்டுக்கு 1,88,760 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய வரி முறையில் இந்த விகிதம் சற்று குறைந்து ரூ. 84,240- ஆக இருக்கும். அதுவே திருத்தப்பட்ட புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால் ரூ. 5,200 செலுத்தினால் போதும். திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ் ஒருவர் ரூ. 1,83,560 வரை அதிகபட்சமாக வரி சேமிக்க முடியும். இதனால் மாதத்திற்கு ரூ.15,297 மிச்சமாகும்.
ரூ. 15.25 லட்சம் வருமானம்: ஒருவர் ரூ. 15.25 லட்சம் வருமானம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்திருந்தால்.. ஆண்டுக்கு 2,65,200 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய வரி முறையில் இந்த விகிதம் சற்று குறைந்து ரூ. 1,35,200- ஆக இருக்கும். அதுவே திருத்தப்பட்ட புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால் ரூ. 1,01,400 செலுத்தினால் போதும். திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ் ஒருவர் ரூ. 1,63,800 வரை அதிகபட்சமாக வரி சேமிக்க முடியும். இதனால் மாதத்திற்கு ரூ.13,650 மிச்சமாகும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications