சென்னை: கிரெடிட் கார்டுகள் அன்றாட செலவுகளை நிர்வகிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது வசதியாகவும் மற்றும் பல சலுகைகளுடன் இருப்பதால், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
உங்கள் வழக்கமான செலவுகளில் கிரெடிட் கார்டுகளை இணைப்பதன் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.

கேஷ்பேக் ரிவார்ட்ஸ்: கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் மிகவும் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று, தினசரி பயன்பாட்டிற்காகக் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது கிடைக்கும் கேஷ்பேக் ரிவார்ட்ஸ். இந்தியாவில் உள்ள பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் மளிகைப் பொருட்கள், எரிபொருள் மற்றும் யூட்டிலிட்டி பில்கள் போன்றவகைகளுக்கு கேஷ்பேக் வழங்குகின்றனர்.
ரிவார்ட் பாயிண்ட்ஸ்: ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பயனர்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இது போன்ற சில ரிவார்ட் சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகள் வருகின்றன. இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பின்னர் ஷாப்பிங், ட்ராவல் போன்றவற்றில் தள்ளுபடிகள் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்: ஃபுட், ஷாப்பிங் அல்லது பொழுதுபோக்கு என எதுவாக இருந்தாலும், கிரெடிட் கார்டுகள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.
கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம்: கிரெடிட் கார்டுகளின் பொறுப்பான பயன்பாடு ஒரு தனிநபரின் கடன் வரலாற்றில் சாதகமான பங்களிப்பை அளிக்கிறது. சரியான நேரத்தில் பணம் செலுத்துதல் மற்றும் நல்ல நிதி நடத்தை ஆகியவை ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம், எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெற நல்ல கிரெடிட் ஸ்கோர் அவசியமாகிறது.
Bankbanzaar.com இன் CEO அதில் ஷெட்டி, “உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் கட்டண வரலாறு. நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, உங்கள் மாதாந்திர பில்களில் சரியான நேரத்தில் பணம் செலுத்தும்போது, பிற்காலத்தில் உங்களுக்கு கடன் தேவைப்பட்டாலும், கடன் பெரும் வசதியை ஏற்படுத்தி தரும். உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாகவும் சரியான நேரத்திலும் தொடர்ந்து செலுத்துவது பொறுப்பான நிதி நடத்தையை வெளிப்படுத்துகிறது மற்றும் கிரெடிட் கார்டை வைத்திருப்பதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறவும் உதவுகிறது எனக் கூறியுள்ளார்.
வசதியான ஆன்லைன் பரிவர்த்தனைகள்: ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஷாப்பிங் செய்யும் போது, கிரெடிட் கார்டுகள் அதீத வசதியை வழங்குகின்றன. விமானங்கள் முன்பதிவு செய்தாலும், உணவை ஆர்டர் செய்தாலும் அல்லது ஆன்லைனில் பொருட்களை வாங்கினாலும், கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது.
வட்டி இல்லாத காலம்: கிரெடிட் கார்டுகள் சலுகைக் காலத்தை வழங்குகின்றன, இதன் போது பயனர்கள் எந்த வட்டி கட்டணமும் இல்லாமல் பயன் பெறலாம். இந்த வட்டி இல்லாத காலம் பொதுவாக 20 முதல் 50 நாட்கள் வரை இருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications