சென்னை: நீண்ட காலமாக பிக்சட் டெபாசிட்கள் (FD-கள்) என்று சொல்லக்கூடிய நிலையான வைப்புத் தொகை, தனி நபர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிப்பதற்கான பாதுகாப்பான வழியாக இருந்து வருகிறது. இந்த முதலீடுகள் அனுபவம் உள்ள முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி.. அல்லது தொடக்க நிலையாளர்களாக இருந்தாலும் சரி.. இருவருக்குமே ஏற்ற விருப்பமாக இருக்கிறது. பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக பலன்களைப் பெறுவதற்கு எவ்வாறு உங்கள் வருமானத்தை அதிகரிப்பது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் பிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம். அதனை எப்படி பயன்படுத்துவது? எவ்வாறு சேமித்தால் உங்களால் அதிக லாபம் பெற முடியும்? என்பது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
FD-களில் அதிக லாபம் பெற வேண்டுமானால், முதலில் FD என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். FD திட்டங்கள் பேங்க் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் முதலீடு செய்யும் அசல் தொகையை உங்களால் முதிர்வு காலத்திற்கு முன்னரே பெற முடியாது. நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு அந்தந்த வங்கிகளை பொறுத்து வட்டி வழங்கப்படும்.

FD திட்டங்களின் லாபத்தை அதிகரிப்பது எப்படி?:
FD வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்: FD-களில் அதிக லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழி, வெவ்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது. வட்டி விகிதங்கள் அந்தந்த வங்கிகளைப் பொறுத்து மாறுபடலாம். எனவே ஆராய்ச்சி செய்வதன் மூலம் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறலாம்.
நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்: நீண்ட காலத்திற்கு, நீங்கள் FD திட்டங்களில் முதலீடு செய்யும் போது, அதிக அளவு வட்டி வருமானம் கிடைக்கும். எனவே தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். முதிர்வு காலத்திற்கு முன்பே FD திட்டங்களில் இருக்கும் தொகையை எடுத்தால், அதற்கு நீங்கள் அபராதம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களைப் பெறலாம். இது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
FD லேடரிங்: FD லேடரிங் என்னும் முறையில் உங்களுடைய முதலீட்டை இன்னும் அதிகப்படுத்தலாம். உதாரணமாக உங்களிடம் ரூ. 10 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு ரூ. 3 லட்சத்தை 1 வருட கால FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். இன்னொரு ரூ. 3 லட்சத்தை 3 வருட கால FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 4 லட்சத்தை 5 வருட கால FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரு வருடத்திற்கு பிறகு ரூ. 3 லட்சம் முதலீடு செய்த FD திட்டம் முடிவடையும். அப்போது வட்டியுடன் சேர்ந்து அந்த தொகையை எடுத்து, மீண்டும் இன்னொரு FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதாவது முதிர்வு பெற்ற தொகையை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து வருமானம் பெறுவதே FD லேடரிங் எனப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான சலுகை: நீங்கள் மூத்த குடிமக்களாக இருந்தால், உங்களுக்கான சிறப்பு சலுகையையும் பல வங்கிகள் தருகின்றன. அதில் அதிக வட்டி விகிதங்கள் போன்றவை அடங்கும்.
பிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்கள்: இதுதான் முக்கியமான ஒன்று. நீங்கள் பிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, A வங்கி 6.8 சதவீத வருமானத்தை 2 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு தருகிறது என்று வைத்துக் கொள்வோம். B வங்கி 7 சதவீத வட்டியை 3 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்குகிறது. தற்போது இந்த 2 வங்கியின் வட்டி விகிதங்கள் மற்றும் கால அளவை பொறுத்து எவ்வளவு தொகை வருமானமாகக் கிடைக்கும் என்பதை நீங்கள் பிக்சட் டெபாசிட் கால்குலேட்டர்களைக் கொண்டு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் முதலீட்டு முடிவுகள் எடுக்கும் போது வசதியானதாக இருக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications