மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், சர்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விலைகளைத் திருத்தி புதிய விலையை அறிவிக்கிறது.
இதன்படி, வியாழக்கிழமை (May 1), வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையை 14.50 ரூபாயும், விமான எரிபொருளின் விலையை 4.4 சதவீதமும் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு, உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் இது இந்த விலை குறைப்பு நடந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக டாலர் மதிப்பு, தங்கம் விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் இருந்து வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் வாயிலாக தற்போது எல்பிஜி மற்றும் விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டு உள்ளது. எல்பிஜி விலை குறைப்பு மூலம் சமானியை மக்களுக்குச் சிறிய அளவில் நிவாரணம் கிடைக்கும், அடிக்கடி விமானம் பயணம் மேற்கொள்ளும் உயர்தட்டு மக்களுக்கும் பலன் கிடைக்கும்.
உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் எரிபொருள் தேவை குறைந்தது மூலம் கச்சா எண்ணெய் விலை குறையத் துவங்கியது, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு, ஒரு பீப்பாய்க்கு 61 டாலருக்குக் கீழே கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக, வணிக எல்பிஜி மற்றும் விமான எரிபொருள் விலைகளைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
குறிப்பாக, நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் இருக்கும் தலைநகர் டெல்லியில் விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு 3,954.38 ரூபாய் குறைந்து, 85,486.80 ரூபாயாக உள்ளது. இது, விமான நிறுவனங்களுக்குச் செலவு சுமையைச் சற்று குறைக்க உதவும். இதன் மூலம் விமான டிக்கெட் விலையும் குறையும்.
ஏப்ரல் 1 விமான எரிபொருள் விலை 6.15 சதவீதம் (5,870.54 ரூபாய்/கிலோலிட்டர்) குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 1 ஆம் தேதியும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் வணிக எல்பிஜி விலை ஒரு சிலிண்டருக்கு 41 ரூபாய் குறைக்கப்பட்டது.
ஆனால், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை 853 ரூபாயாக மாறாமல் உள்ளது. கடந்த மாதம் இதன் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது, இது சாமானிய மக்களின் வாழ்க்கை செலவைச் சற்று அதிகரித்தது.
விமான எரிபொருள் மற்றும் வணிக எல்பிஜி விலைகள் உள்ளூர் வரிகள் மற்றும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்கு மாறுபடுகின்றன. தமிழ்நாட்டில் தற்போதைய எல்பிஜி சிலிண்டர் விலையை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications