இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குரூப் பல துறையில் புதிதாக வர்த்தகத்தை துவங்குவது மட்டும் அல்லாமல் பல துறையில் புதிய முதலீடுகளையும் செய்து அசத்தி வருகிறது.
தற்போது ரத்தன் டாடா டாடா குழுமத்தின் நேரடி நிர்வாக முடிவுகள் எடுப்பதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டாடா குழுமத்தின் பிசினஸில் ரத்தன் டாடா அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக உடல் நலனில் அவர் அக்கறை காட்டுவதாக தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் புதிய உறுப்பினர்களில் ஒருவராக மாயா டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மாயா டாடா!
நோயல் டாடாவின் மூன்று குழந்தைகளில் மாயா டாடா தான் இளையவர். மாயா இங்கிலாந்தின் பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் பல்கலைக்கழகத்தில் (Bayes Business School and University) பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
3 வாரிசுகள்
டாடா-வின் வாரிசுகளில் ஒருவர் தான் மாயா டாடா இவருக்கு வயது 34. ரத்தன் டாடா சமீபத்தில் ஓய்வு காலத்தில் இருப்பதால், அவரின் டாடா அறக்கட்டளையை நிர்வகிக்க 3 டாடா வாரிசுகளை நியமித்துள்ளார். அதில் ஒருவர்தான் மாயா டாடா.
முக்கிய பொறுப்பு
மாயா தற்போதுள்ள புதிய பிசினஸ் பகுப்பாய்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தில் (new age analytics and technology) அதிகம் ஆர்வம் உள்ளவர் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். மாயா டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இவர் லைம் லைட்டில் இருந்து விலகியே உள்ளார்.
டாடா குழுமத்தில் இணைந்த மாயா டாடா!
மாயா டாடா முதலில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான Tata Capital இன் Tata Opportunities Fund இல் பணியாற்றத் தொடங்கினார். இவர் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கியதாகவும், முதலீட்டாளர்களை கையாள்வதில் கைதேர்ந்தவர் என்றும் தரவுகள் கூறுகின்றன.
நோயல் டாடா
Tata Opportunities Fund மூடப்பட்டத்தை தொடர்ந்து, மாயா டாடாவின் தந்தையான நோயல் டாடா அவரை முன்மோக்கி செல்லும் குழுவுடன் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார். அதனிபின் N.சந்திரசேகரன் அவர்களின் தலைமையிலான டாடா டிஜிட்டல் குழுவில் அவர் இணைக்கப்பட்டார். அவர் டாடா டிஜிட்டலில் இருந்த காலத்தில் Tata Neu app அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் மருத்துவமனை
கொல்கத்தாவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகிக்கும் டாடா மருத்துவ மைய அறக்கட்டளையின் குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இந்த அறக்கட்டளை ரத்தன் டாடாவால் 2011 இல் திறக்கப்பட்டது.
மாயா டாடாவின் பெற்றோர்!
நோயல் டாடா மற்றும் ஆலு மிஸ்திரி தம்பதியினரின் 3 குழந்தைகளில் ஒருவர்தான் மாயா டாடா. லியா மற்றும் நெவில் டாடா , மாயா டாட்டவின் சகோதரர்கள் ஆவர். இவர்கள் மூவரும் டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல்
நோயல் டாடா ட்ரெண்ட் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் தலைவராக (Trent and Tata Investment Corporation) உள்ளார். மேலும் டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications