தமிழக மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இது பல வகைகளிலும் மக்களுக்கு உதவுகிறது. ஏனெனில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. விலைவாசி உயர்ந்தாலும் குறைந்த விலையில் இது போன்ற பொருட்கள் கிடைப்பது பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு என்னவோ சுமையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ரேஷன் கார்டு தொடர்பான சில புதிய விதிகள் அவ்வப்போது வெளியாகும். அதன் படி தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசுதரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர். அதோடு 7.5 கோடி தனி நபர்கள் ரேஷன் கார்டு மூலம் பலனடைந்து வருகின்றனர். அரசு ரேஷன் பொருட்கள் வழங்குவதை நெறிப்படுத்தும் விதமாகத்தான் இந்த பயோமெட்ரிக் தரவைப் பெற்று வருகிறது. இதன் மூலம் சரியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடையும்.

ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்துவது, ரேஷன் கார்டு பொருட்களை தேவை இல்லை என்றாலும்.. பெற்று பிறரிடம் காசுக்கு விற்பனை செய்வது போன்றவற்றை சரிப்படுத்தும் விதமாக இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அரசு பெற்று வருகிறது.
அதோடு அரசாங்கம் தற்போது "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மக்கள் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆனால் அரசு தரப்பில் பல்வேறு வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு தான் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
இப்படி ரேஷன் கார்டு விண்ணப்ப செயல்முறை தொடங்கி ரேஷன் பொருட்களை வழங்கும் செயல்முறை வரை அனைத்தையும் அரசு நெறிப்படுத்த வருகிறது. எனவே குறிப்பிட்ட தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று உங்களுடைய கைரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. தடையின்றி ரேஷன் பொருட்கள் பெற பொதுமக்கள்.. அரசு கூறும் காலகெடுவுக்கு ஏற்ப தங்களுடைய கைரேகையை பதிவு செய்து கொள்வது அவசியம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications