இந்திய தொழிலதிபரும் எம்பிஏ சாய்வாலா என்ற நிறுவனத்தின் நிறுவனருமான பிரபுல் பில்லோர் என்ற நபர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் ஊனமுற்ற ஒரு கல்லூரி மாணவருக்கு காலேஜ் ஃபீஸ்-ஐ கட்டியுள்ளார். அவர் உதவிய மாணவர் தற்போது ஒரு நல்ல பதவியில் பணிபுரிகிறார். ஒரு சிறிய உதவி ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகப் பெரிய மாற்றத்தில் மகிழ்ச்சி அடைவதாக தனது X பதிவில் பிரபுல் பில்லோர் தெரிவித்துள்ளார்.
தனது X பதிவில் பிரபுல் பில்லோர், "உங்களுடன் ஒரு தனிப்பட்ட விஷயத்தை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 4 வருடங்களுக்கு முன்பு தார் மாவட்டத்தைச் சேர்ந்த புடே சிங் என்ற இளைஞருக்கு கல்லூரி கட்டணமாக 75,000 ரூபாயை கட்டி உதவி செய்தேன். உடல் ஊனமுற்ற புடே சிங் தனது கல்லூரி வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அதனால் அப்படியே நின்றுவிடாமல் தொடர்ந்து ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். இன்று பெங்களூரில் உள்ள க்ரோவ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது.

ஒரு சிறு விஷயம் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை இந்தச் சம்பவம் எனக்கு நினைவூட்டுகிறது. அவருடைய பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமை கொள்கிறேன்", என்று பிரபுல் பில்லோர் எழுதியிருந்தார்.
அதேபோல அந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டு தான் பணியமர்த்தப்பட்டது குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் பகிர்ந்த போஸ்டுக்கு பலரும் தங்களின் பாராட்டைத் தெரிவித்து வந்தனர். அதோடு பிரபுல் பில்லோர், புடே சிங் அனுப்பிய மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்திருந்தார்.

60,000-திற்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்ற இந்த போஸ்ட் பில்லோருக்கு அதிக பாராட்டைப் பெற்று தந்தது. "புடே சிங்குக்கு வாழ்த்துக்கள் மற்றும் நீங்கள் ஒருருக்கு உதவியதில் மிகவும் மகிழ்ச்சி", என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் "ஆஹா. அருமை.. பிரபு பாய் நல்ல செய்கை இது.." என்று எழுதி இருந்தார். தக்க நேரத்தில் பிரபுல் செய்த உதவியின் காரணமாக, தற்போது ஒரு இளைஞரின் வாழ்க்கை மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications