டீ கடை வைத்து 24 கோடி சொத்து, 90 லட்சத்தில் கார்.. MBA டிராப்அவுட்-ன் வெற்றி கதை..!

நாம் அனைவரும் கனவு காண்கின்றோம். அந்தக் கனவுகளை நனவாக்க அதைத் துரத்துகின்றோமா? உண்மையில் உங்களின் கனவுகளைத் துரத்திப் பிடிக்க முயலுங்கள்.

அது உங்களை ஒரு நாள் வெற்றியாளராக மாற்றி விடும். தன்னுடைய கனவை விடாமல் துரத்திப் பிடித்த ஒரு சாதனையாளர் தான் பிரஃபுல்.

சாதாரண டீ விற்பனையாளராகத் துவங்கி இன்று இளம் தொழிலதிபராகப் பலருக்கு இன்ஸ்பிரேஷன் ஆக மாறியுள்ளார். யார் இந்தப் பிரஃபுல்..? சமீபத்தில் இவர் வாங்கிய 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெர்சிடீஸ் பென்ஸ் கார் இண்டர்நெட் உலகை அதிர வைத்தது.

பிரஃபுல் பிலோர்

பிரஃபுல் பிலோர்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரஃபுல். இவர் தனது எம்பிஏ படிப்பைப் புகழ்பெற்ற அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்குப் படிக்கும் பொழுது தனது படிப்பின் மீதான ஆர்வத்தை இழந்து 2017 ஆம் ஆண்டுத் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

புத்தகம்

புத்தகம்

கல்லூரி படிப்பை நிறுத்திய போதிலும், புத்தகங்களைப் படிப்பதும், பிரபல வணிகத் தலைவர்களின் மேற்கோள்களை உள்வாங்குவதுமாகப் பிஸ்னஸ் மீதான தனது ஆர்வத்தைத் தக்க வைத்து வந்துள்ளார். அவருடைய ஆர்வம் அவரை இன்று ஒரு தொழிலதிபராக மாற்றியுள்ளது.

எம்பிஏ சாய் வாலா

எம்பிஏ சாய் வாலா

இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிளைகளை உடைய எம்பிஏ சாய் வாலா என்னும் மாபெரும் வெற்றி பிராண்டை கட்டியெழுப்பிய தொழிலதிபராக உயர்ந்தவர் பிரஃபுல். இந்த நிறுவனத்தின் தற்போதைய விற்றுமுதல் சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

தனது சிறு வயதில் இருந்தே பல்வேறு மனிதர்களைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய பிரஃபுல், தனக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய பயணத்தைப் பணம் ஒரு பொழுதும் தடை செய்ததில்லை.

காசு ஒரு பிரச்சனை இல்லை

காசு ஒரு பிரச்சனை இல்லை

கையில் இருந்த காசிற்கு ஏற்ற படி பஸ், ரயில், ரிக்ஷா போன்ற பல்வேறு வாகனங்களில் பயணம் செய்து, தனது பட்டறிவை வளர்த்துக் கொண்டார். தனது கல்லூரி இந்தப் பரந்து விரிந்த உலகமே என அவர் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய பெற்றோர் அவரை ஒரு கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்க வற்புறுத்தினர்.

பெற்றோர் கனவு

பெற்றோர் கனவு

பெற்றோரின் கனவை நனவாக்கவும், தனது பட்டறிவைப் பட்டை தீட்டவும் இந்த வாய்ப்பை பிரஃபுல் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதன் காரணமாக அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்தார்.

பட்டறிவு vs படிப்பறிவு

பட்டறிவு vs படிப்பறிவு

கல்லூரியில் படிக்கும் பொழுது அவருடைய பட்டறிவு, கள யதார்த்தத்தைக் கண்டறிய உதவியது. எல்லோருக்கும் அதிகச் சம்பளம் தரும் வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்பதை உணர்ந்த பிரஃபுல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அகமதாபாத்தில் உள்ள SG நெடுஞ்சாலையில் சாய் தேலாவை (தள்ளு வண்டியில் டீ கடை) தொடங்க முடிவு செய்தார்.

டீ தான் முக்கியப் பானம்

டீ தான் முக்கியப் பானம்

டீயைத் தவிர வேறு எந்தப் பானமும் அதிகளவில் இந்தியா முழுவதும் உட்கொள்ளப்படுவதில்லை. டீ-யை எப்படித் தயார் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எல்லோரும் குடிப்பார்கள் என்று மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். நான் வேறொரு தொழிலைத் தொடங்க விரும்பினால், அதற்குக் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

8,000 ரூபாய் முதலீடு

8,000 ரூபாய் முதலீடு

என்னிடம் அவ்வளவு பணம் அப்பொழுது இல்லை. என் கையில் இருந்த 8,000 ரூபாயை வைத்துக்கொண்டு, சாலையோரத்தில் டீ விற்க ஆரம்பித்தேன் என்று பிரஃபுல் ஒரு பேட்டியில் தனது நினைவுகளை அசைபோடுகின்றார்.

 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

பிரஃபுல் டீ விற்பதை தவறாக நினைக்கவில்லை. எல்லா வியாபாரத்திலும் உச்சத்தை அடைய ஒரு வழி இருக்கின்றது. அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் பிரஃபுல் . அவர் தன்னுடைய குறிக்கோளில் தெளிவாக இருந்த போதும் அவரது பெற்றோர் கோபமடைந்தனர்.

உறவினர்கள்

உறவினர்கள்

அதோடு மட்டுமல்ல அவருடைய உறவினர்கள் அவரைத் தினமும் கேலி செய்தனர். இவற்றை எல்லாம் பிரஃபுல் கண்டு கொள்ளவில்லை. கேலி கிண்டல்கள அனைத்தையும் புறக்கணித்து தனது வணிகத்தை விரிவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்தும் அளவுக்கு அவர் ஒரு புத்திசாலியாக இருந்தார்.

வரவேற்பு

வரவேற்பு

ஆங்கிலம் பேசும் ஒருவர் டீ விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அனைவரும் அவருடைய டீ கடையைத் தேடி வரத்தொடங்கினர். அதன் காரணமாகப் பிரஃபுல் பிரபலமாகத் தொடங்கினார். இருப்பினும், பிரஃபுல்லுக்கு டீ தயாரிப்பது எப்படி என அப்போது தெரியவில்லை.

முதல் தவறு

முதல் தவறு

முதல் நாளிலேயே டீயில் அதிகச் சர்க்கரை சேர்த்து டீயை பானகமாக மாற்றி விட்டார். ஆனால் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல், படிப்படியாகத் தேநீர் தயாரிக்கும் திறனைப் பெற்றார்.

உழைப்பில் இருந்து பிஸ்ன்ஸ்

உழைப்பில் இருந்து பிஸ்ன்ஸ்

"இன்று யாரேனும் என்னை டீ தயாரிக்கச் சொன்னால், நான் அதைச் செய்ய மாட்டேன். எனக்கு அது பிடிக்கவில்லை. நான் தெருவில் தேநீர் தயாரிக்கும் போது சிரமப்பட்டேன், ஆனால் இப்போது நான் எனது தொழிலை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறேன், "என்று அவர் கிண்டல் கலந்த தொனியில் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

90 லட்சத்தில் கார்

90 லட்சத்தில் கார்

தனது முயற்சியின் பயனாகப் பிரஃபுல் சுமார் 90 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யுவி காரை மிகச் சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவியது.

24 கோடி ரூபாய் சொத்து

24 கோடி ரூபாய் சொத்து

MBA படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய பிரஃபுல் இன்று டீ கடை மூலம் சுமார் 24 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். மேலும் பிரஃபுல் சில நாட்களுக்கு முன்பு வாங்கிய Mercedes GLE 300D சொகுசு கார் 90 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதும் வியப்பு அளிக்கும் விஷயம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+