ராஜிவ் பாஸ்கர் சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் எம்பிஏ பட்டம் பெற்ற பட்டதாரி. இந்தியாவில் முதல் கிராஃப்டட் காய்கறி நர்சரி கார்டனை பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள செஹ்ஜோவால் கிராமத்தில் ராஜிவ் பாஸ்கர் அமைத்துள்ளார். இதற்கு முன்னர் கொய்யா விவசாயம் செய்து ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்த ராஜிவ், காய்கறி கிராஃப்டிங் நுட்பத்தை முயற்சி செய்ய முடிவு செய்துள்ளார்.
கிராஃப்ட்டிங் என்றால் என்ன?: நாளுக்கு நாள் விவசாயத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. விவசாயத்தின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் வேளாண் விஞ்ஞானிகள் தினமும் புது புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். கிராஃப்டிங் என்பதும் அத்தகைய நுட்பங்களில் ஒன்றாகும். ஆனால் இது பல ஆண்டுகளாக பயன்பாட்டில் தான் உள்ளது. முன்பு மரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கிராஃப்டிங் தற்போது சின்ன சின்ன செடிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சொல்ல வேண்டுமானால் 2 வெவ்வேறு செடிகளைப் பயன்படுத்தி ஒரே செடியின் மூலம் பலன்களை பெறுவது தான் கிராஃப்ட்டிங்.

இந்தக் கிராஃப்டிங் நுட்பத்தை பயன்படுத்தி தான் தற்போது ராஜிவ் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். உத்தரகாண்டில் உள்ள ஜிபி பந்த் வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்கிறார். பின்னர் ராய்ப்பூரை தளமாகக் கொண்ட விஎன்ஆர் சீட்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கிறார். அங்கு அவர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியாக பணியாற்றினார். விஎன்ஆர் சீட்ஸில் பணிபுரியும்போதே ராஜிவ் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
தனது தொழில் வாழ்க்கையின் போது ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் உரையாடியதாகவும், அவர்கள் கூறிய பொதுவான கூறையைக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதில் ஒன்று "இமாச்சலப் பிரதேசம் போன்ற சில பகுதிகளில் மண்ணின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதன் விளைவாக தாவரங்கள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றன. மேலும் விவசாயிகள் அதிக ரசாயனங்களை செலுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது என்று சில விவசாயிகள் ராஜிவிடம் கூறியுள்ளனர். எனவே விவசாயிகளின் கவலையை தீர்க்கும் பொருட்டு புதுமையான விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ராஜிவ் முடிவு செய்துள்ளார்.
அப்படி அவர் யோசித்த நுட்பம் தான் கிராஃப்டிங். அதிக மகசூலுக்கு காய்கறி கிராப்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். காய்கறி விவசாயத்தை பொருத்தவரை விதைகளை விதைப்பது, நாற்றுகளை வயல்களுக்கு மாற்றுவது என பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
கிராஃப்டிங் செய்வதற்கு இரண்டு வெவ்வேறு செடிகளின் பகுதி தேவைப்படுகிறது வேர் தண்டு என்பது ஒரு நல்ல வலுவான தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.. இது காய்கறிகள் விளைவிக்கும் மேல் பகுதியை தாங்கக்கூடிய வேர் அமைப்பை கொண்டுள்ளது. சுட்டு அல்லது மேல் பகுதி இந்த வலுவான வேர்ப்பகுதியுடன் இணைந்து 15 முதல் 18 நாட்களுக்குள் வயல்களில் நடவு செய்ய தயாராகிறது. கிராஃப்டிங் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு ராஜீவ் தாய்லாந்தின் கசெட்சார்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்று பல சோதனைகளிலும் பங்கேற்றுள்ளார். வீடு திரும்பிய பிறகு ரூப்நகரில் உள்ள தனது பண்ணையில் வெற்றிகரமாக சோதனைகளையும் செய்துள்ளார்.
மேலும் அனைத்து பருவ கால சவால்களையும் எதிர்த்து தாங்கக்கூடிய வலுவான நோய் எதிர்ப்பு தாவரங்களின் வேர் தண்டுகளை பயன்படுத்தி கிராப்டிங் செய்திருக்கிறார். இதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனங்களின் செலவையும் குறைக்க முடியும். அதே வேளையில் காய்கறி செடிகளின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும்.
உதாரணமாக தக்காளி கன்றுகளுடன் கத்தரி வேர் தண்டுகளை ஒட்டி வைக்கின்றனர். கத்தரி வேர்கள் வலிமையானதாகவும் அதிக சத்தும் கொண்டதாகவும் இருப்பதால் அவை நோய்களை எதிர்க்கும் மற்றும் தாவரத்தின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும். இதன் விளைவாக அதிக மகசூல் மற்றும் தரமான தக்காளி கிடைக்கும் என்கிறார் ராஜீவ்.
இதுபோன்ற 2 செடிகளை ஒட்ட வைக்கும் போது தக்காளி கன்றுகள் மார்ச் மாதத்தில் நடப்பட்டால் ஜூலை வரை மட்டுமே தருகிறது. அதேநேரம் இரண்டு வெவ்வேறு செடிகளை ஒட்டப்பட்டு சத்தூட்டப்பட்ட கன்றுகள் அக்டோபர் வரை உற்பத்தியை தொடர்கின்றன. அறுவடை காலம் 2.5 முதல் 3 மாதங்கள் அதிகரிக்கிறது.
இதன் விளைவாக விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இந்தியாவில் சராசரியாக ஒரு செடியின் தக்காளி விளைச்சல் 5 கிலோவாக இருக்கிறது. ஆனால் ஒட்டப்பட்ட செடிகள் நன்கு பராமரிக்கப்படும் பட்சத்தில் 12 கிலோவுக்கு மேல் மகசூல் தருகிறது என்று ராஜீவ் கூறியுள்ளார்.
கிராஃப்டிங் முயற்சியை தொடங்குவதற்கு முன்பு ராஜிவ் 2021-ஆம் ஆண்டில் விஎன்ஆர் நர்சரியில் 1 லட்சம் ஓட்டு ரக காய்கறி செடிகளை ஆர்டர் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகித்துள்ளார். அனால் 30% விவசாயிகள் மட்டுமே இந்த செடிகளை கவனித்துக் கொண்டனர். இதனால் அதிக மகசூலும் கிடைத்தது.
அதன் பிறகு 2022-ஆம் ஆண்டில் 50,000 கிராஃப்ட் செடிகள் வேண்டும் என்ற ஆர்டர் கிடைத்துள்ளது. இதை வழங்குவதற்காக 2022-ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக அருஜ் நர்சரியை ராஜிவ் தொடங்கி இருக்கிறார். அடுத்தடுத்த சீசன் வரும் போது அருஜ் நர்சரியில் தக்காளி, குடைமிளகாய், மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட 5 லட்சம் ஒட்டுரக காய்கறி செடிகள் விற்பனையானது.
ஒரு செடிக்கு 20 சதவீத லாபம் கிடைக்கும். மேலும் 12 ரூபாய் என்ற விலையில் ராஜீவ் விற்பனை செய்கிறார். குடைமிளகாய் போன்ற ஒட்டு செடிகளின் விலை 18 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கடந்த சீசனில் ராஜீவ்-க்கு ரூ.50 லட்சம் டர்ன் ஓவர் கிடைத்துள்ளது. அடுத்த சீசனில் 20 லட்சம் செடிகளை விற்பனை செய்து ரூ.2 கோடி லாபத்தை உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாவரங்களை வளர்ப்பதற்கு கோகோபீட் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது அதிக நீர் பிடிப்பு திறன் கொண்டதாக இருப்பதால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடுகிறது. தட்டுகளில் வளர்க்கப்பட்டு அவற்றின் தண்டு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது விற்பனை செய்யப்படுகிறது. தக்காளிக்கு 1.5 முதல் 2.5 மில்லி மீட்டர் தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
ஒட்டுச் செடிகளின் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க முடியும் என்று எண்ணி ராஜீவ் கையில் எடுத்திருக்கும் புதிய முயற்சி விவசாயிகளிடையே பாராட்டை பெற்று வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications