சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தின் சார்முடியா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்மாரிகா சந்திரசேகர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அவரது குடும்பம் விவசாயத்தை செய்து வருகிறது. தனது குடும்பத்தாரின் விவசாயத் தொழிலில், ஈடுபாடு கொண்டிருந்தார் ஸ்மாரிகா.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக புனேயில் டெலிகாம் துறையில் பணியாற்றி வந்த ஸ்மாரிகா மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். 2018இல் தனது வேலையை விட்டுவிட்டு அவர் ராய்ப்பூருக்கு குடிபெயர்ந்து அங்கு ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

வார இறுதி நாட்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் ஸ்மாரிகா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து விவசாய வேலைகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் 2021இல் முழுமூச்சாக விவசாயத்தில் ஈடுபட ஸ்மாரிகா முடிவெடுத்தார். இதையடுத்து தொண்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.
புனேயில் உள்ள எம்ஐடி ஸ்கூல் ஆப் டெலிகாம் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் படித்துள்ளார் ஸ்மாரிகா. அதற்கு முன் அவர் ராய்ப்பூரில் இன்ஜினியரிங் படித்தார்.
2018 முதல் 2021 வரை நான் கூர்ந்து பார்த்தவரை நெல் சாகுபடி ஒரு லாபம் தரும் தொழிலாகத் தெரியவில்லை. அதன் நாற்று விலை அதிகம். ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்தால் திடீரென்று மொத்த பயிரும் நாசமாகக் கூடிய அபாயம் உள்ளது. எனது தந்தை துர்கேஷ் சந்திரசேகர் காய்கறி சாகுபடி ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்றார். எனவே நானும் காய்கறிகளை விளைவிக்க முடிவு செய்தேன் என்று ஸ்மாரிகா கூறினார்.
நெல் மற்றும் கோதுமையை ஒப்பிட்டால் பணப்பயிரான காய்கறிகள் குறுகிய காலத்தில் விளைந்து நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என்று அவர் மேலும் கூறினார்.
நிலத்தின் தன்மை, மட்டம் போன்றவற்றை அறிந்து கொண்டு ஸ்மாரிகா விவசாயத்தில் இறங்கினார். வேளாண் நிபுணர்களுடன் ஆலோசித்து விட்டு தனது 20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யத் தொடங்கினார்.
நிலத்தில் சொட்டு நீர் பாசனத்தை அமைத்ததால் தண்ணீர் தேவை குறைவாக இருந்தது. சொட்டு நீர் பாசனத்துக்காக ஸ்மாரிகா மத்திய மாநில அரசு மானியங்களைப் பெற்றார். 20 ஏக்கர் நிலத்தை உழுது 12 டிராலி பசுஞ்சாணத்தை சேர்த்தார். பின்னர் நிலத்தை அப்படியே விட்டுவிட்டு சூரிய ஒளியில் உலர விட்டார்.
அத்துடன் நுண்சத்துகளையும், நொதிகளையும் சேர்த்து மண் வளத்தை ஸ்மாரிகா மேம்படுத்தினார். இதைத் தொடர்ந்து அந்த நிலத்தில் கத்தரிக்காய், தக்காளி பயிர்களை அடுத்தடுத்து சாகுபடி செய்தார்.
இந்தியாவில் தக்காளி சாகுபடி நல்ல லாபம் தரும் விவசாயமாகும். சந்தையில் அதற்கு எப்போதுமே கிராக்கி உண்டு. தக்காளியை வைத்து கேட்ச்அப், சாஸ், பேஸ்ட்களை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்கிறது.
ஸ்மாரிகாவின் பண்ணையில் 6 அடி வெளியில் பாத்திகள் இட்டு, செடிக்கு செடி ஒரு அடி இடம் விட்டு பயிர்கள் நடப்படுகின்றன.
ஆகஸ்ட்- செப்டம்பரில் தக்காளியை நட்டால் நவம்பரில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
நவம்பரில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் வரை அறுவடை செய்யலாம். தண்ணீர் தேங்கினால் தக்காளி செடி அழுகிவிடும் என்பதால் நிலத்தை சரிவாக அமைத்துள்ளோம் என்று ஸ்மாரிகா கூறுகிறார்.
தனது எம்பிஏ படிப்பின் அறிவின் மூலம் நல்ல மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவத்தை அறிந்து அவர் திறம்பட தொழில் செய்து ஆண்டுதோறும் நல்ல லாபத்தை ஈட்டுகிறார். அவரது விவசாயத்தின் மூலம் உள்ளூரில் பலருக்கு வேலைவாய்ப்பையும் ஸ்மாரிகா அளித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச்சுடன் முடிந்த சீசனில் 13 ஏக்கர் நிலத்தில் 55 டன் தக்காளியை அறுவடை செய்தோம். இதற்கு எனது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறினார் ஸ்மாரிகா.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications