இந்தியாவில் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. எம்பிஏ பட்டப்படிப்பை முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது என்றால் லைஃப் செட்டில் என்று தான் நாம் அனைவரும் எண்ணுவோம். ஆனால் இங்கே ஒரு இளைஞர் அப்படிப்பட்ட வேலையை விட்டு விட்டு ஓலாவில் வாடகை கார் ஓட்டுனராக வேலைக்கு சேர்ந்திருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்துகிறது.
வெற்றி என்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய கட்டமைப்புகளுக்குள் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையே இந்த இளைஞரின் வாழ்க்கை உணர்த்தும் பாடமாக அமைந்திருக்கிறது. சச்சின் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் என்னுடைய சகோதரன் எம்பிஏ படிப்பை முடித்திருக்கிறார் அவருக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் என்றால் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். ஆனால் அந்த வேலை அவருக்கு திருப்பி தரவில்லை எனக் கூறியிருக்கிறார்.

எம்பிஏ படிப்பை முடித்து அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்த போதும் அந்த வேலை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு கார்ப்பரேட் உலகத்திலிருந்து என்னுடைய சகோதரர் வெளியேறிவிட்டார். ஒருநாள் அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து ஓலாவில் டாக்ஸி டிரைவராக சேர்ந்து விட்டார் என கூறியிருக்கிறார். அவரை சுற்றி இருந்த அனைவருமே நீ செய்தது மிகப்பெரிய தவறு என அவரை திட்டினார்கள் ஆனால் தற்போது அவரின் வளர்ச்சியே வேறுவிதமாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.
முதலில் ஓலாவில் டாக்சி டிரைவராக வேலைக்கு சேர்ந்தவர் படிப்படியாக இந்த டாக்ஸி தொழிலில் வளர்ச்சி அடைந்து தற்போது ஐந்து கார்களை தனக்கு சொந்தமாக வைத்துள்ளார் என கூறுகிறார். வாடகை கார் பிஸ்னஸ் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் அவருக்கு கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் இவருக்கு ஐந்து கார்கள் சொந்தமாக இருக்கிறது மாதந்தோறும் 1.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது எனக் கூறியிருக்கிறார். சில சமயம் சில பாதைகள் நம்மை கீழே இழுத்துச் செல்வதை போல தோன்றலாம் ஆனால் உண்மையில் அது டவுன் கிரேட் கிடையாது அதுதான் அப்கிரேட் என்பதையே இவருடைய வாழ்க்கை பயணம் உணர்த்துவதாக கூறுகிறார். பலரும் கார்பரேட் உலகத்தை விட்டு வெளியே வரக்கூடிய அவருடைய முடிவை பாராட்டி இருக்கின்றனர். சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
வருமானம், வாழ்க்கை முறை ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் மாறும். இவர் வேலையில் இருந்திருந்தால் இன்னும் சம்பளம் உயர்ந்திருக்கும். ஆனால் வேலையாளாக இல்லாமல் வேலை தரும் நபராக மாற வேண்டும் என அவர் எடுத்த முடிவு அவருக்கு மன நிம்மதியையும் கனிசமான வருமானத்தையும் தந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

