சென்னை: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாகவும் எம்பிபிஎஸ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 11,700 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 5050 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கின்றன. மீதமுள்ள இடங்கள் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நான்கு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.
எம்பிபிஎஸ் படிப்பு: தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் இடங்களில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன. இது தவிர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு இடங்களும் இருக்கின்றன. இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் எம்பிபிஎஸ் படிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் உயர்வு: மருத்துவ படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக இந்த கட்டண விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய சுயநிதி கல்லூரிகளில் 3,450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.
புதிய கட்டணம் அறிவிப்பு: இந்த இடங்களுக்கான நிகழாண்டுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஆர் பொங்கிப்பன் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழு பல கட்ட ஆய்வு நடத்தி எம்பிபிஎஸ் கல்வி கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
எவ்வளவு உயர்வு?: இதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 4.35 லட்சம் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து கல்லூரிகளுக்கும் 15 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்களுக்கு 27 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டை விட 2.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.
எம்பிபிஎஸ் கல்வி கட்டணம்: தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 5.40 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் ஆகும். நிர்வாக இடங்களுக்கு ஆண்டு எம்பிபிஎஸ் கல்வி கட்டணமாக 16.20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் மேம்பாட்டு நிதியாக வசூல் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: சிறப்பு கட்டணம் , கல்வி கட்டணம் ஆகிய அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் ,உணவு கட்டணத்தை தனியாக வசூல் செய்து கொள்ளலாம் என்றும் இதை தவிர கூடுதலாக எந்தவித கட்டணமும் ,நன்கொடையும் பெறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்கள்: வழக்கமாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் இடங்களில் சீட் கிடைத்து அதில் யாரும் சேராமல் இருந்தாலோ அல்லது அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தாலும் அவை காலாவதியான சீட்கள் என மாற்றப்பட்டு அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பின்னரும் இந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை என்றால் அவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணத்தை விட 30% குறைவாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த கட்டணம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications